Alaioli
உள்நாட்டு அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை - சிவநேசன் வலியுறுத்து!!

ஆலயங்களில் உள்நாட்டு அர்ச்சர்களுக்கு முன்னுரிமை வழஙக்க வேண்டும்.குறிப்பாக ஆலய கும்பாபிசேகம்  உட்பட பெரும் விழாக்களில் உள்நாட்டு அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் அவசியம் என்றும் பேரா மாநில இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் வலியுறுத்தினார்.


ஆலய கும்பாபிசேகங்களுக்கு உள்நாட்டு அர்ச்சகர்கள் போதிய அளவில் இருப்பதாக இந்து அர்ச்சகர் சங்கம் தன் கவனத்திற்குப்கொண்டு வந்திருப்பதையும் நினைவுக்கூர்ந்த அவர் சூழல் அப்படியிருக்க அவர்களை நன்முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.


பேரா மாநில இந்து அர்ச்சகர் சங்கமும் கபாயாங் சிவசுப்பிரமணியர் ஆலயமும் இணைந்து நடத்திய கல்வி யாகம் நிகழ்வை தொடக்கி வைத்தபோது சிவநேசன் இதனை வலியுறுத்தினார்.

 மாநிலத்திலுள்ள ஆலயங்களுக்கு குறிப்பாக கும்பாபிஷேகங்கள் நடத்தப்படும் ஆலயங்களுக்கு பேரா மாநில அரசு வாயிலாக தாம் தொடர்ந்து நிதி உதவியை வழங்கி வருவதையும் சிவநேசன் சுட்டிக்காண்பித்தார். 


மேலும்,கும்பாபிஷேகம் நடத்தப்படும் ஆலயங்களுக்கு  இந்தியாவில் இருந்து வரவழைப்படும் அர்ச்சகர்களுக்கு அதிகமான நிதிகளை வழங்குவதற்கு பதில் குறைந்த செலவில் உள்நாட்டு அர்ச்சகர்களை வைத்து கும்பாபிஷேகங்களை நடத்தலாம என்றும் சிவநேசன் ஆலோசனை கூறினார்.


பேரா மாநில இந்து அரச்சகர் சங்கமும் , கம்போங் கபாயாங் சிவசுப்பிரமணியர் ஆலயமும் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி யாகம் நிகழ்வை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான சிவநேசன் இதனை  வலியுறுத்தி குறிப்பிட்டார்.


பேரா மாநிலத்தில் சிறப்பான முறையில் தமது சமய பணிகளை நடத்தி வரும்  இந்து அர்ச்சகர் சங்கம்  தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மாபெரும் கல்வியை நடத்தியுள்ளதுடன் 12 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதியை வழங்கியுள்ளது மகிழச்சியை அளித்துள்ளதாக கூறி்ய அவர் அச்சங்கத்திற்கு 25 ஆயிரம் ரிங்கிட் நிதியையும் மானியமாக அறிவித்தார்.


இந்த நிகழ்வில முன்னதாக தலைமையுரை ஆற்றிய பேரா இந்து அர்ச்சகர் சங்கத் தலைவர் க. டினேஷ் குமார்,  தமிழ்ப்பள்ளிகள் மற்றும் ஆலயங்களைத் தொடர்ந்து நிலை நாட்ட  எதிர்கால மாணவர்களின பங்களிப்பு அவசியமாவதாக கூறினார்.


இந்த நாட்டில் தமிழ்பள்ளிகள நிலை நாட்ட   அனைவரின் பங்களிப்பு அவசியம் , அந்த வகையில் பேரா அரச்சகர் சங்கமும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


கம்போங. கப்பாயாங் ஆலய மண்டபத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடத்தும் முன்பு ஆலயத்தில் நடைபெற்ற  கல்வி்யாக நிகழ்வில் சுமார் 500 மாணவர்கள்  பங்கேற்றனர்.


ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவ சுப்பிரமணியர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment
Trending News