Alaioli
பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் நிதியுதவி.

பினாங்கு பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம், கோலாலம்பூர் ஷா ஆலமில் உள்ள எஸ்.ஜே.கே மிட்லாந்து மற்றும் மிட்லாந்து மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தேசிய திருமுறைப் போட்டியில் பங்கேற்க குளுகோர் இந்து சங்க பேரவையினருக்கு பேருந்து செலவிற்கான நிதியுதவி வழங்கினார்.


இந்நிதியுதவியால் 17 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர். போட்டியில் பங்கேற்ற குளுகோர் இந்து சங்கம் பெருமைக்குரிய 6 விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் குழந்தைகளின் பெற்றோர்களும் உறுதுணையாக பங்கேற்றனர். சமூக வளர்ச்சியும், பண்பாட்டு முன்னேற்றமும் எப்போதும் தமக்கு ஊக்கமாக இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் தெரிவித்தார். பாரம்பரியத்தைக் காக்கவும், அதை கொண்டாடவும் உதவும் இத்தகைய முயற்சிகளுக்கு எப்போதும் ஆதரவளிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் திருமுறைப் போட்டியில் 6 விருதுகள் வென்ற குளுகோர் இந்து சங்கத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் வாழ்த்தினைப் பதிவி செய்தார்.

Leave a Comment
Trending News