Alaioli
மாக் மண்டின் முருகன் ஆலயத்தில் திரு பார்திபன் குடும்பத்தின் உபயம் சிறப்பாக நடைபெற்றது.

மாக் மண்டின் அருள்மிகு ஸ்ரீ முருகன் பரிபாலன அவை முருகன் ஆலயத்தில் திரு பார்திபன் அவர்கள் முன்னாள் பட்டர்வொர்த் இந்து இளைஞர் இயக்கத் தலைவர்  மற்றும் அவரது குடும்பத்தின் உபயமாக மண்டலாபிஷேக சிறப்பு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.


29 ஆகஸ்ட் 2025 அன்று நடைபெற்ற இவ்விழாஇ ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வுடன் இணைந்த மன்டலாபிஷேகத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இரவு 8.00 மணிக்கு தொடங்கிய இவ்விழாவில்இ நாதஸ்வர கச்சேரிஇ சிறப்பு பூஜைஇ ஆராதனை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.


திரு பார்திபன் குடும்பத்தினர்இ ஆலயத் தலைவர் உதயகுமார்இ செயலாளர் கஜேந்திரன்இ பட்டர்வொர்த் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் வி.எல். கணேசன் மற்றும் வட்டார பொதுமக்கள் பெருமளவில் கலந்து விழாவை சிறப்பித்தனர்.


ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்ததாவதுஇ எதிர்வரும் 15.10.2025 அன்று புர்வாங்க விநாயகர் பூஜைஇ புண்ணிய வாசனம்இ மூலமந்திர கணபதி ஹோமம்இ பூர்ணாஹுதி தீபாராதனைஇ மாலையில் கும்ப அலங்காரம்இ யாகசாலை பிரவேசம்இ முதல் கால மூலமந்திர ஜப ஹோமம் மற்றும் மண்டலாபிஷேக பூஜை தீபாராதனை நடைபெறும்.


அதனைத் தொடர்ந்து 16.10.2025 அன்று காலை பூர்வாங்க பூஜைஇ இரண்டாம் கால மூலமந்திர ஜப ஹோமம்இ மஹா அபிஷேகம்இ 108 சங்காபிஷேகம்இ பிற்பகல் 12.00 மணிக்கு விஷேஷ பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும். இரவு 7.00 மணிக்கு ஆலய நித்திய பூஜைஇ ஸ்ரீ சண்முக நாதருக்கு சண்முக அர்ச்சனைஇ வள்ளி தெய்வானை சமேத கோவில் புரப்பாடு தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.


மக்கள் அனைவரும் இவ்விழாக்களில் பங்கேற்றுஇ ஸ்ரீ முருகனின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகம் அழைப்புவிடுத்துள்ளது.

Leave a Comment
Trending News