Alaioli
 உள்ளூர் கால்பந்து அணிகளுக்கான போட்டிக்கு செல்லும்     பினாங்கு மாநகராட்சியின் கால்பந்து அணிக்கு வாழ்த்து!

பினாங்கு நவம்பர் 26 

மலேசிய உள்ளூர் அதிகாரத்துவ சங்கத்தின் கால்பந்துப் போட்டியில் பங்கேற்பதற்கு, விரைவில் ஜோகூர் மாநிலத்திற்கு பயணமாகவிருக்கும் பினாங்கு மாநகர் மன்றத்தின் கால்பந்து அணிக்கு, அதன் மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் தனது மனப் பூர்வமான நல்வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.


       
நேற்று மாலையில் இங்கிருக்கும் மாநகர் மன்றத்தின் விளையாட்டு மன்றத்தில் சம்பந்தப்பட்ட கால்பந்து அணியின் வீரர்களை நேரில் சந்தித்த அவர், இப்போட்டியில் வாகை சூடி மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் அதே வேளையில் மன்றத்தின் நற்பெயரையும் தக்க வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

     
இப்போட்டியின் பொருட்டு கடந்த சில தினங்களாக இந்த அணியின் வீரர்கள் யாவரும் தீவிரப் பயிற்சிகளில் ஈடுபாடு காட்டி வந்திருப்பது தொடர்பிலும் மகிழ்ச்சி தெரிவித்த அவர், இதற்கான முயற்சிகளின் பலனை செவ்வனே நிரூபிக்க வேண்டுமெனவும் ஆசி கூறினார்.அவ்வண்ணம் 2025ஆம் ஆண்டுக்கான வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சின் வெற்றிக் கோப்பையை வாகை, சூடுவதற்கு, ஒரே அணி, ஒரே பணி, ஒரே வெற்றி என்ற கொள்கை வேட்கையில் போராட்ட உணர்வோடு களம் கண்டு, அணியின் பலத்தை பிறர் மெச்சத்தக்க வகையில் உணர்த்துமாறும் மேயர் அறிவுறுத்தினார்.


Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News