Alaioli
பினாங்கு டிசம்பர் 5 நாடு தழுவிய நிலையில் செயல்படுகின்ற பல்வேறு மாநிலங்களின் ஊராட்சி மன்ற ஊழியர்கள், பினாங்கு மாநகர் மன்றத்திற்கு வருகையளித்து, இங்கு பற்பல விவகாரங்கள் தொடர்பில் தகுந்த ஆலோசனைகளையும் வேண்டிய பல வழிகாட்டல்களையும் பெற்றுச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் நிலைமை, தொடர்ந்தாற் போல் நிகழ்ந்து வரும் பட்சத்தில், நேற்று காலையில், தலைநகரைச் சார்ந்த ஷா அலாம் ஊராட்சி மன்றத்தின் 39 பேர் கொண்ட ஊழியர்கள் அவ்வாறேஇங்கு வருகையளித்து திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்ட அத்தரப்பினருக்கு தலைமை வகித்திருந்த, மேசாரா முகமட் யூசோப் மற்றும் அஹமட் சியாஹிர் ஷாரீர் ஆகிய இருவரது வருகையை மாநில மாநகர் மன்றம் சார்பில் கைருள் அனாஸ் முராத் மற்றும் மர்டியானா சாஆட் ஆகிய மூத்த அதிகாரிகள் இருவருடன், மாநகர் மன்ற சொத்து மதிப்பீடு மற்றும் மேலாண்மைத் துறை ஊழியர்கள் சிலரும் பேருவகைக் கொண்டு இன்முகத்துடன் வரவேற்றனர்.
பினாங்கு மாநகர் மன்றத்தினரால் கையாளப்படும் நிர்வாக செயல்பாட்டு முறைகள், மேலாண்மை அமைப்புகளின் ஆளுகைக் கூறுகள் மற்றும் சொத்து மேலாண்மைக்குரிய மதிப்பாய்வு திட்ட அம்சங்கள் போன்றவை தொடர்பில் விவாதங்களும் உடனெழுந்த ஐயங்களுக்கு உகந்த தீர்வுகளுக்கும் வழி காணப்பட்டன.
இச்சந்திப்பின் வாயிலாக இவ்விரு தரப்பு வாதங்களின்உச்சக்கட்ட உடன்பாடு சுமூக நிலையை எய்து ஒருவரையொருவர் வெளிப்படுத்திய பரஸ்பர நல்லிணக்கம், இருவரது தரப்பிலும் அணுக்கமான பிணைப்புக்கு வழி வகுத்ததோடு, நட்பின் உறவை மேலோங்கச் செய்யும் வகையில் நிறைவடைந்தது.
பத்துகாஜா
மெங்லெம்புவில் 2026 சீனப் புத்தாண்டுடன் சமூக நலத்திட்டம் – சிவகுமார் பெருமிதம்!!
பந்திங்
வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் கோலலங்காட் மாவட்டத்தின் திட்டங்கள் படிப்படியாக முன்னெடுக்கப்படும்; முகமட் ஹஸ்ரி தகவல். எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம்
பட்டம் பெற்ற 30 இந்திய பெண்கள் சமூக வளர்ச்சிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்து.
ஷா ஆலம்
ஈரானில் நடந்து வரும் வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்து விஸ்மா புத்ரா மலேசியர்களுக்குப் புகலிடம் அளித்து வருகிறது; பாப்பா ராய்டு பாராட்டு.
கிள்ளான்
பண்டமாரான் ஜெயா மாரியம்மன் ஆலய மாசிமகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
ஜொகூர்
சிகாமாட் காவல் உயர் அதிகாரி சுப்ரிதண்டன் அமாட் சம்ரி அவருடைய தலைமையில் கடந்த மாதம் சிறப்பு போலீஸ் ஒன்றுகூடல் நிகழ்வு
சித்தியவான்
ஆலயப் பாதுகாப்பு நிறைவாக உள்ள பேரா மற்றும் பினாங்கு : பேரா இந்துதர்ம மாமன்றம்..!
பினாங்கு
Pertubuhan Lima Generasi Pulau Pinang Santuni 100 Penerima Menerusi Majlis Berbuka Puasa Dan Bantuan Kebajikan