Alaioli
UNHCR (United Nations High Commissioner
for Refugees) எனப்படும்,அகதிகளுக்கான உலகளாவிய பாதுகாப்புக் காவலரின்
மலேசியப் பிரதிநிதியான, லூயிஸ் ஆபின் என்பவர் நேற்று முன்தினம் பினாங்கு மாநகர் மன்ற மேயர் டத்தோ அ.ராஜேந்திரனுடன் மரியாதை நிமித்தச் சந்திப்பு நடத்தினார்.

இந்தச் சந்திப்பின்போது சமூக அடிப்படையிலான பாதுகாப்புத் தலைவர் டாக்டர் சுசிலா பாலசுந்தரம் மற்றும் மனிதாபிமான விவகாரத் துறைத் தலைவர் அட்லி ஜகுவான் ஆகியோரும் உடன் வருகையளித்து மேயருடனான சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில்,கருத்துப் பரிமாற்றங்களுடன் விவாதம் நடத்தினர்.
பினாங்கில்
தஞ்சமடைந்திருக்கும் அகதிகள் தொடர்பில் தலைதூக்குகின்ற பிரச்சனைகள் குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்ட வேளையில், இரு தரப்பு
ஒத்துழைப்புக்கும் இடையேயான சாத்தியக் கூறுகள்
தொடர்பில் அறிவுப் பகிர்வு, சமூக ஆதரவு ஆகிய அம்சங்கள்
தொட்டும் கலந்தாலோசிக்கப்பட்டது.

மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறை, பரஸ்பர புரிதல் மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பினர்களின் நல்வாழ்வையும் மேம்படுத்தக் கூடிய முன் முயற்சிகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்த விவாதக் களம் வாயிலாக ஒரு படிப்பினைக்கு வழிகாணப்பட்டது.
இக்கூட்டத்தில்
பினாங்கு மாநகராட்சியின் பிரதிநிதிகள், பொறியியல்
துறை இயக்குநர் சியா சின் கூய்; மேம்பாட்டுத்
திட்டமிடல் இயக்குநர் முகமது பஷீர் சுலைமான்; பாரம்பரியப்
பாதுகாப்புத் துறை இயக்குநர் லீ திட் குன்; நகரம்
மற்றும் கிராமப்புறத் திட்டமிடல் அதிகாரி லிம் சூய் பிங் ஆகியோருடன் பொதுத் தொடர்புத் துறையின் உதவி இயக்குநர் சுபாஷினி தவமணியும் கலந்து கொண்டார்.

பத்துகாஜா
மெங்லெம்புவில் 2026 சீனப் புத்தாண்டுடன் சமூக நலத்திட்டம் – சிவகுமார் பெருமிதம்!!
பந்திங்
வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் கோலலங்காட் மாவட்டத்தின் திட்டங்கள் படிப்படியாக முன்னெடுக்கப்படும்; முகமட் ஹஸ்ரி தகவல். எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம்
பட்டம் பெற்ற 30 இந்திய பெண்கள் சமூக வளர்ச்சிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்து.
ஷா ஆலம்
ஈரானில் நடந்து வரும் வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்து விஸ்மா புத்ரா மலேசியர்களுக்குப் புகலிடம் அளித்து வருகிறது; பாப்பா ராய்டு பாராட்டு.
கிள்ளான்
பண்டமாரான் ஜெயா மாரியம்மன் ஆலய மாசிமகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
ஜொகூர்
சிகாமாட் காவல் உயர் அதிகாரி சுப்ரிதண்டன் அமாட் சம்ரி அவருடைய தலைமையில் கடந்த மாதம் சிறப்பு போலீஸ் ஒன்றுகூடல் நிகழ்வு
சித்தியவான்
ஆலயப் பாதுகாப்பு நிறைவாக உள்ள பேரா மற்றும் பினாங்கு : பேரா இந்துதர்ம மாமன்றம்..!
பினாங்கு
Pertubuhan Lima Generasi Pulau Pinang Santuni 100 Penerima Menerusi Majlis Berbuka Puasa Dan Bantuan Kebajikan