Alaioli
உலு கிள்ளான் மிருகக் காட்சிச் சாலை வளர்ச்சிக்கு 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு.. பிரதமர் அன்வார் அறிவிப்பு

எஸ்.எஸ்.மணிமாறன்

உலு கிள்ளான் (கோலாலம்பூர்) ஜன.10  உலு கிள்ளான் மிருகக் காட்சிச் சாலை வளர்ச்சிக்கு 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு செய்தார். கடந்த 15.12.2025 இல் சீனா தேசத்தில் இருந்து இங்கு உலு கிள்ளான் மிருகக்காட்சி சாலைக்குத் தருவிக்கப்பட்ட சென் ஷிங் மற்றும் ஷியாவோ யுயி ஆகிய 2 பண்டா கரடிகளை,  பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இருவரும் இன்று மதியம்  நேரில் சென்று பார்வையிட்டனர்.


அவர்களுடன் காவல் துறையினர் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு இலாகா அதிகாரிகள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவ்வமயம்,  தயார் நிலையில் இருந்த மிருகக் காட்சிச் சாலை அதிகாரிகளைச் சந்தித்த பிரதமர் அன்வார் பண்டா கரடிகள் பராமரிப்பு ஆரோக்கியம் போன்ற நடப்பு நிலவரம் குறித்து விளக்கம் கேட்டார். பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர்  மிருகக் காட்சிச் சாலை வளர்ச்சிக்கு 15 மில்லியன் ரிங்கிட்டை  கூடுதல் நிதியாக தாம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தகவல் தெரிவித்தார்.


அதே வேளையில், இதன் அருகில் உள்ள நிலப்பரப்பை வேறு எந்த நடவடிக்கைகளுக்கும் தற்போது பயன்படுத்தக் கூடாது என்ற எச்சரிக்கை அறிவிப்பையும் அவர் இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார். 


இவ்வாண்டு மலேசியா சுற்றுலா ஆண்டாகப் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதால், மிருகக் காட்சிச் சாலைக்கு வரவிருக்கும் வெளியூர் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் இதை வழி நடத்தி வரும் அதிகாரிகள் முன்கூட்டியே உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து செயல்படுத்தி வர வேண்டும் என்று தாம் அவர்களைப் பணித்திருப்பதாக  அன்வார் செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News