Alaioli
அரசின் மேற்பார்வையில் செயல்படும் 1,781 பெர்பாடுவான் பாலர் பள்ளிகள் தரம் மேம்படுத்தப் பட்டுள்ளன; யுனேஸ்வரன் தகவல்.

எஸ்.எஸ்.மணிமாறன். 

கோலாலம்பூர்  மார்ச் 4.  அரசின் மேற்பார்வையில் செயல்படும் 1,781 பெர்பாடுவான் பாலர் பள்ளிகள் தரம் மேம்படுத்தப் பட்டுள்ளதாக ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராம்ராஜ் இன்றைய நாடாளுமன்ற அவையில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார். 


பாலர் பள்ளி மாணவர்களை வழி நடத்த தகுதிப் பெற்ற ஆசிரியர்கள் கண்காணிப்பில் பெர்பாடுவான் பாலர் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். ஒற்றுமைத் துறை அமைச்சின் வழி நடத்தப்படும் பாலர் பள்ளிகள் எண்ணிக்கை நாடு தழுவிய அளவில் படிப்படியாக அதிகரிக்கப் படும் என்று யுனேஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். 


மாநில அளவில் செயல்படும் பெர்பாடுவான் பாலர் பள்ளிகளுக்கு தங்களது பிள்ளைகளை அனுப்பி வைக்க இந்திய பெற்றோர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற வேண்டுகோளை யுனேஸ்வரன் முன் வைத்தார்.

Leave a Comment
Trending News