Alaioli
கோலலங்காட்டில் பன்றிப் பண்ணைகள் அதிகரிப்பால் மனித சுகாதாரத்திற்குப் பாதிப்பை உருவாக்கலாம்... சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை.

எஸ்.எஸ்.மணிமாறன்.

ஷா ஆலம் ஜன.13 கோலலங்காட் மாவட்டத்தில் இருக்கும் தஞ்சோங் சிப்பாட் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான பன்றிப் பண்ணைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதன் அதிகபட்ச துர் நாற்றம், சுகாதாரக்கேடுகள், அருகில்  ஆற்றில் கலந்தோடும் பன்றிக் கழிவுகள் மற்றும் மோரிப் கடற்கரைப் பகுதியில் சேரும் இத்தகைய கழிவுகளால் மனித ஆரோக்கியத்திற்கு மருட்டல் விடுக்கும் வகையில் இருப்பதால் மாநில அரசு இதற்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராப்புடின் இட்ரிஸ்ஷா சில தினங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தார்.


இந்த நிலையில், இன்று மாலையில் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்படுத்திய மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, பன்றிப் பண்ணையை நவீனமயமாக்குவதற்கு போதிய மாநில நிதி மற்றும் நில ஒதுக்கீடும் தற்போது இல்லை என்பதால் இந்தப் பிரச்சினையை வேறு ஒரு கோணத்தில் தாம் சிந்தித்து சரியாக முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். தற்போது தஞ்சோங் சிப்பாட் வட்டாரத்தில் அதிமான பன்றிப் பண்ணைகள் இருப்பதால் மக்கள் நலனைக் கருதி பண்ணைகள் அனைத்தும் அங்கிருந்து வெளியே அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவை அண்மையில் சிலாங்கூர் சுல்தான் விடுத்திருந்தார்.


அதே வேளையில், தஞ்சோங் சிப்பாட் சட்ட மன்ற மக்கள் மையத்தின் உறுப்பினருமான டத்தோ போர்ஹான் அமான் ஷாவுக்கு பன்றிக் கழிவின் துர்நாற்றம் அவரது மூக்கைத் துளைக்கவில்லையா? இந்தச் சம்பவம் அவரது கவனத்திற்கு எட்டவில்லையா?என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.


சிலாங்கூர் சுல்தானின் வார்த்தைக்கு மதிப்பளிக்கும் வகையில் புக்கிட் தாஹார் பகுதிக்கு பன்றிப் பண்ணைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு மத்தியில் ஆட்சிக் குழு உறுப்பினர்களுடன் ஒரு திடீர் சந்திப்பை ஏற்படுத்தி இதற்கான முடிவை மிக விரைவில் செய்தியாளர்களிடம் தெரிவிப்பதாக மந்திரி பெசார் அமிருடின் உறுதி அளித்தார். கோலலங்காட்டில் பன்றிப் பண்ணைகள் தூய்மைக்கேடு விவகாரம் மக்கள் மத்தியில் தற்போது திரும்பும் இடமெங்கும் வைரலாகி பரவி வருகிறது.

Post Image

Leave a Comment
Trending News