Alaioli
செய்தி:ஆர்.ரமணி
மலேசிய சூப்பர் பைக் ரைடர் 'உம்லிங் லா பாஸ்' உலக சாதனை லண்டன் – 11 பிப்ரவரி 2026 ஜொகூர் மாநிலம் ஸ்கூடாய் பகுதியைச் சேர்ந்த 27 வயதான மலேசிய ரைடர் கெத்தரின் ஸ்டீவன் (Khetherine Steven), உலகின் உயரமான மோட்டார் சைக்கிள் பயண சாலைகளில் ஒன்றாகக் கருதப்படும் உம்லிங் லா பாஸ் (Umling La Pass) சிகரத்தை மோட்டார் சைக்கிளில் வெற்றிகரமாக அடைந்த முதல் பெண்மணியாக வரலாறு படைத்துள்ளார்.

கடல் மட்டத்திலிருந்து 19,024 அடி (5,883 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பாதை, உலகின் மிகவும் சவாலான மலைப்பாதைகளில் ஒன்றாகும்.இந்த சாதனைப் பயணம் 2025 செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 2 வரை ஆறு நாட்கள் நடைபெற்றது. கடுமையான இமயமலைப் பரப்பில், ஆக்சிஜன் குறைந்த உயரமான நிலை, கடுமையான காலநிலை மற்றும் சவாலான சாலைகள் ஆகியவற்றை எதிர்கொண்டு அவர் தனது உடல் மற்றும் மன வலிமையை நிரூபித்தார்.

இந்த பயணம் மிகுந்த தைரியம், திறமை மற்றும் தொழில்நுட்ப நுணுக்கம் தேவைப்படும் ஒன்றாகும்.பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததையடுத்து, கெத்தரின் ஸ்டீவனின் சாதனை 2025 டிசம்பர் 9 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்டது. அவரது சாதனை பின்வரும் மூன்று சர்வதேச அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது:

International Achiever Book of World Records
Cholan Book of World Records
Kalam’s World Records
Malaysia Book Of Records
1998 ஜூலை 23 ஆம் தேதி பிறந்த இவர், தைரியம் மற்றும் உறுதியின் மூலம் உலகளவில் பாராட்டுகளை பெற்றுள்ளார். இவரது சாதனை இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதிவேக மோட்டார் விளையாட்டுகளில் பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.

கெதெரின் ஸ்டீவனின் இந்த வெற்றி, உலகம் முழுவதும் உள்ள ரைடர்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது. விடாமுயற்சி இருந்தால் கடினமான புவியியல் சவால்களையும் கடக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

இதனிடையே நாட்டின் மூத்த சூப்பர் பைக் ரைடர் மோட்டார் செக்கிள் போட்டியில் உலக சாதணையும்,மலேசிய சாதனை புத்தகத்தில் கால் பதித்துள்ள டத்தோ ஶ்ரீ நடராஜன் அவர்களின் தன்னலமற்ற முயற்சியில் உலகின் உயரமான மோட்டார் சைக்கிள் பயண சாலைகளில் ஒன்றாகக் கருதப்படும் உம்லிங் லா பாஸ் (Umling La Pass) சிகரத்தை மோட்டார் சைக்கிளில் வெற்றிகரமாக அடைந்து வரலாறு படைக்கவும் விருது பெறவும் உதவியை அளத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.




சிலாங்கூர்
பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுற்றுப் புறங்களைச் சுத்தம் செய்வது கேவலமில்லை!- சமூக ஆர்வலர் பரம்சிவா விளக்கம்.
ஆலயம்
தெலுக் இந்தான் சித்திரா பௌர்ணமி நெறியுடனும் பண்பாட்டுடனும் நடைபெற காவல் துறை தீவிரம் : டத்தோ சிவநேசனுடன் கையோடு கைகோர்ப்பு..!
சிலாங்கூர்
தாமான் அமான் குடியிருப்பில் கால்வாய்கள் உடைந்து பாதிப்பு, மக்கள் அவதி- சாம்சன் நடவடிக்கை
பினாங்கு
Tech Dome Penang Sparks Scientific Curiosity Among Students
சிலாங்கூர்
Mayat bunuh dibungkus dalam kanvas di Pulau Angsa
பினாங்கு
Persiapan Sukan SEA 2027 di Pulau Pinang cecah 85 peratus
கிளாந்தான்
Wanita dicekup polis, simpan raifal jenis M16 dalam rumah
கோலாலம்பூர்
நிதி கட்டுப்பாடுகளுக்கிடையில் மலேசியாவின் பொருளாதார நிலைத்தன்மை நம்பிக்கையான இலக்கை நோக்கி பயணிக்கிறது - மாண்புமிகு சிவகுமார்!!