Alaioli
பினாங்கு எட்வெண்ட்டிஸ்ட் தனியார் மருத்துவமனையில் சமூக சுகாதாரத் தூதர்கள் ஊக்குவிப்பு!

பினாங்கு ஏப் 5-பினாங்கு மாநிலத்தில் தனியார் மருத்துவமனையாக விளங்கினாலும், பொதுச்சேவை ரீதியாக வசதி குறைந்த ஏழை எளியோர் உடல் நலனில் தனி அக்கறை கொள்ளும் பரிவான அடிப்படையில், இதன் தாராள அம்சத் திட்டங்களில்,சமூக சுகாதாரத் தூதர்களின் செயல்பட்டு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.


கடந்த 2023ஆம் ஆண்டு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விரிவான சுகாதார ஆய்வின் புள்ளி விவரப்படி 15.6% சதவிகித பருவ வயதினர் நீரிழிவு நோயிலும், 29.2% சதவிகிதம் பேர்,உயர் ரத்த அழுத்தத்திலும், 33.3% சதவிகிதத்தினர் அதிக உடற்கொழுப்பு உள்ளவர்களாக அறியப்பட்டிருக்கும் நிலையில், இத்தகையோருக்கு, தகுந்த வழிகாட்டும் நிலையில் சமூக சுகாதாரத் தூதர்களின் நியமனம் அவசியமென்று இம்மருத்துவமனை கருத்தில் கொண்டிருக்கிறது.


இம்மூன்று உடல் உபாதைகளுடன் மலேசியர்களில் 2 மில்லியன் பேர் வாழிக்கைப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இவர்களுக்கு எந்நேரத்திலும் இருதயப் பாதிப்பு நிகழும் சாத்தியமிருப்பதாக, இன்று  காலையில் இம்மருத்துவமனை ஏற்படுத்தியிருக்கும் சமூக சுகாதாரத் தூதர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு பிரமுகராக  வந்திருந்து உரை நிகழ்த்துகையில்,  மாநில சுகாதாரத் துறைக்கான  ஆட்சிக் குழு உறுப்பினர்  டேனியல் கூய் சுட்டிக் காட்டினார்.


இந்நிலையை எதிர்கொண்டுள்ள மலேசியர்கள் மீது பரிவு கொண்டு எட்வெண்ட்டிஸ்ட் மருத்துவமனை நிர்வாகத்தினர் கடந்த 2024 ஆம் ஆண்டு முதற்கொண்டே இத்தகு பணிக்குழுவை ஏற்படுத்தி பொதுத்தொண்டாற்றிட துவங்கி விட்ட பட்சத்தில், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் விவேகத் திறனான செயல்பாடுகளிலும் ஈடுபாடு காட்டி வருவது போற்றத்தக்கதென்றும் அவர் புகழுரைத்தார்.


இம்மருத்துவமனை தரப்பினரின் இச்சேவைக்கு தன்னார்வலர்களாக மாநிலத்திலுள்ள பற்பல கல்லூரி மாணவர்களும் மனமுவந்து தடம் பதிக்க புறப்பட்டிருப்பது குறித்தும் வரவேற்பு கூறிய டேனியல், இத்தகு சேவையாளர்களை கௌரவிக்கும் பொருட்டு மருத்துவமனை நிர்வாகக் குழு எத்தனித்திருக்கும் செயலுக்கு நன்றி, பாராட்டி, தாமே அத்தகு அன்பர்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் சார்பில், நற்சான்றிதழ்களையும் கேடயங்களையும் பரிசளித்து வாழ்த்துரைத்தார்.

Post ImagePost Image

Leave a Comment