"பிகேஆர் கட்சியில் வேறுபட்ட அணிகள் இல்லை"டத்தோ ஶ்ரீ ரமணன்.
பிகேஆர் கட்சியின் தேசிய துணை தலைவர் தேர்தலை முன்னிட்டு பிகேஆர் கட்சியில் பல பிரிவுகள் அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகளை பிகேஆர் கட்சியின் தேசியத் துணைத் தகவல் பிரிவு தலைவரான இரமணன் இராமகிருஷ்ணன் மறுத்தார்.
"நாங்கள் அனைவரும் கட்சியின் தலைவரான அன்வார் இப்ராகிம்மை மட்டுமே ஆதரிக்கின்றோம். நுருல் ஈசா அன்வார் அணி, ரஃபிசி ரம்லி அணி போன்றவை இல்லை. ஒரே அணி தான் – அதாவது 'அன்வார் தலைவர் அணி'," மட்டுமே என்றார் என்றார்.
நூருல் ஈசா -க்கு 201 பிகேஆர் தொகுதிகள் ஆதரவு:
பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெர்மாத்தாங் பாவ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நூருல் ஈசா போட்டியிடுவது குறித்து, 220 பிகேஆர் கட்சி தொகுகளில் 201 தொகுதிகள் அவரை ஆதரவு தெரிவித்தால், இது எதிர்பார்க முடியாத மாறுபட்ட விதத்தில் அமைந்துள்ளது என இராமனன் நேற்று அதை லெயிட் தங்கும் விடுதியில் பிகேஆர் கட்சியின் தொகுதி தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
"இதில் நெபோட்டிசம் இல்லை என்றும் கடை நிலை உறுப்பினர்களின் விருப்பமே இது. அன்வாருக்கே அவரது மகள் போட்டியிடுவதைப் பற்றி தெரியாது," என்றும் அவர் கூறினார்.
தற்போதைய துணைத் தலைவர் மற்றும் பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி 2022ல் சைஃபுதின் நசூதியோனை தோற்கடித்து இந்த பதவியைப் பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.பிகேஆர் கட்சியில் தேசிய அளவிலான தேர்தல் எதிர்வரும்24.5.2025 ஆம் நாள் நடைப்பெறும் என எதிர்பார்கப்படுகிறது.