Alaioli
ஜோகூர் சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்– லிங் தியான் சூன் வாழ்த்து

கே.கே.ஆர்.தேவி

ஜோகூர், ஏப்.15 – ஜோகூர் மாநில சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு தலைவர் லிங் தியான் சூன், ஜோகூர் சுல்தானா அமீனா மருத்துவமனை 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது மாநில சுகாதார சேவையின் தரத்தை எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.


நியூஸ்வீக், ஸ்டாட்டிஸ்டா வெளியிட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், சுல்தானா அமீனா மருத்துவமனை உலகளவில் உயர்ந்த தர மருத்துவ சேவையை வழங்கும் மருத்துவமனைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான மேம்பாட்டு முயற்சிகளின் விளைவாக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.


மருத்துவ சேவை தரம், வசதிகள் மேம்பாடு, நோயாளர் பராமரிப்பு திறன் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்ற நடவடிக்கைகள் ஜோகூர் மக்களின் ஆரோக்கிய பாதுகாப்பை வலுப்படுத்த உதவுகின்றன என்று லிங் தியான் சூன் தெரிவித்தார்.


இந்த அங்கீகாரம் ஒரு புதிய உற்சாகத்தை வழங்கும் முன்னேற்றமாக கருதப்பட வேண்டும் என்றும், மாநில அரசுடன் இணைந்து சுகாதார துறையை தொடர்ந்து வலுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் தங்களின் அர்ப்பணிப்பு முயற்சிகளின் மூலம் மக்களுக்கு தரமான சேவையை வழங்கி வருவது பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார். அவர்களின் கடின உழைப்பு இந்த சர்வதேச அங்கீகாரத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.


மக்களின் நலனை பாதுகாக்க சுகாதார துறையில் தொடர்ந்து மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் லிங் தியான் சூன் தெரிவித்தார்.- Alaiolinews

Post Image

Leave a Comment
Trending News