Alaioli
டிகே.மூர்த்தி
ஈப்போ, ஏப்ரல் 15-பேரா மாநில சுகாதார இலாகா மற்றும் சுகாதார அமைச்சகம் மூலம் மனநலம் மற்றும் மருத்துவ அதிகாரிகள் எண்ணிக்கைக்கு தீர்வு காணப்படுகிறது. மனநலம் குறித்த பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடைய மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள மனநல மருத்துவர்கள் மொத்தம் 39 பேர் உள்ளனர்.
அவர்களில், தஞ்சோங் ரம்புத்தான் உலுகிந்தா மனநல அரசு மருத்துவமனையில் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் உள்ளிட்ட நிலையில் மொத்தம் 14 மருத்துவர்கள் உள்ளனர். ஈப்போ அரசு (HRPB) மருத்துவமனையில் 8 பேர் உள்ளனர். (3) தைப்பிங் அரசு மருத்துவமனையில் 6 பேர் உள்ளனர்.

தெலுக் இந்தான் அரசு மருத்துவமனையில் 4 பேர் உள்ளனர். மஞ்சோங் அரசு மருத்துவமனையில் 4 பேர் உள்ளனர். சிலிம் ரிவர் அரசு மருத்துவமனையில் 3 பேர் உள்ளனர் என்றும் இன்று நடைபெற்ற பேரா மாநில சட்டமன்ற கூட்டத் தொடரைப் பேரா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சரானி முகமது சித்திரை மாதத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தினைச் சொல்லி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தக் கூட்டத்தில், பேராவில் தேவையான மனநல மருத்துவர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கை அதிகரிக்க மாநில அரசு, சுகாதார அமைச்சகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதா? என்று எதிர்கட்சி சேர்ந்த (PN) கம்போங் காஜா சட்டமன்ற உறுப்பினர் ZAFARULAZHAN BINZAN கேட்டிருந்த கேள்விக்கு சுகாதாரத்திற்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் பதிலளித்தார்.
மனநலம் மற்றும் நிலைத்தன்மையற்ற உணர்ச்சி ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதில் மாநில சுகாதார இலாகாவின் பணியாளர்கள், ஒரு முதுகெலும்பாக விளங்குகின்றனர்.
மனநலம் பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதில் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். மேலும், மனநலம் எப்போதும் உகந்த நிலையில் இருப்பதை உறுதி செய்வதாகவும், பல்வேறு விரிவான உளவியல் சமூக ஆதரவுத் திட்டங்கள் மூலம் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மலேசிய சுகாதார அமைச்சகத்தின் இணைப்பு மருத்துவமனைகளில், மருத்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அடையக்கூடிய அதிகபட்ச எண்ணிகையைப் பெறுவதற்காக, நாங்கள் சுகாதார அமைச்சுடன் தொடர்ந்து கலந்துரையாடியும் வருகின்றோம்.
மலேசிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள 2025 தரவுப்படி, மலேசியாவில் ஒவ்வொரு 1000 மக்கள் தொகைக்கு 403 பேர் மருத்துவர்கள் உள்ளனர்.
பேராவில் ஒவ்வொரு 1000 மக்கள் தொகைக்கு 466 மருத்துவர்கள் உள்ளனர். அதன்படி, மேலும் விரிவான தரவுகளின்படி மலேசியாவும்-சிங்கப்பூரும் பட்டியிலில் முதலிடத்தில் உள்ளன.
இந்த ஒப்பிட்டளவில் அண்டை நாடுகளில் உள்ள விகிதாச்சரம் பின்வருமாறு:- (1) Indonesia-1 : 1400 / (2) Singapura- 1 : 350 / (3) Filipina- 1 : 1250 / (4) Thailand- 1 : 900 / (5) Vietnam- 1 : 700 (6) Myanmar- 1 : 1250 / என்றும் டத்தோ சிவநேசன் மேற்கோள்காட்டினார்.- Alaiolinews
ஆலயம்
மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவை 41 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் = பாப்பா ராய்டு திறந்து வைத்து வாழ்த்துரை
சிலாங்கூர்
ஜெராம் பத்து பாத்தா கிராமத்தில் ஈக்கள் படையெடுப்பு தொடர்கிறது!- மாநில அரசின் நடவடிக்கை தேவை.
சிலாங்கூர்
பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுற்றுப் புறங்களைச் சுத்தம் செய்வது கேவலமில்லை!- சமூக ஆர்வலர் பரம்சிவா விளக்கம்.
ஆலயம்
தெலுக் இந்தான் சித்திரா பௌர்ணமி நெறியுடனும் பண்பாட்டுடனும் நடைபெற காவல் துறை தீவிரம் : டத்தோ சிவநேசனுடன் கையோடு கைகோர்ப்பு..!
சிலாங்கூர்
தாமான் அமான் குடியிருப்பில் கால்வாய்கள் உடைந்து பாதிப்பு, மக்கள் அவதி- சாம்சன் நடவடிக்கை
பினாங்கு
Tech Dome Penang Sparks Scientific Curiosity Among Students
சிலாங்கூர்
Mayat bunuh dibungkus dalam kanvas di Pulau Angsa
பினாங்கு
Persiapan Sukan SEA 2027 di Pulau Pinang cecah 85 peratus