Alaioli
மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவை 41 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் =  பாப்பா ராய்டு திறந்து வைத்து வாழ்த்துரை

எஸ்.எஸ்.மணிமாறன்

ஷா ஆலம் ஏப்ரல் 21-  மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவையின் 41 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தை, மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அதிகாரப்பூர்வத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்குவார். 


வரும் 2.5.2026 சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஷா ஆலம் சுங்கை ரெங்கம் மாநாட்டு மையத்தில் நடைபெற விருக்கும் இக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை மேற் கொள்ள விருக்கும் பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு, கூட்டத்தில் சிறந்த ஆலோசனைகளை முன் வைத்துப் பேசுவார் என்று சிலாங்கூர் மாநில இந்து சங்கப் பேரவைத் தலைவர் தொண்டர்மணி அசோகன் மூக்கன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். 


மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் சிவநெறிச்செல்வர் ஸ்ரீ காசி சங்கபூஷன் கணேசன் தங்கவேலு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றுவார்.  சங்கம் தோற்றுவிக்கப்பட்டு கடந்த 1965 முதல் 2025 வரை 60 ஆண்டுகள் நிறைவு பெற்று வைர விழாவைக் கொண்டாடும் இந்த இனிய சுப வேளையில்,  \' 60 ஆண்டுகால உறுதியுடன் எதிர்கால வெற்றியை நோக்கி \' எனும் கருப் பொருளுடன் பொதுக் கூட்டம் முன்னெடுக்கப்பட்டு சிறப்பாக நடந்தேறும் என்று தலைவர் அசோகன் அலை ஒளியிடம் கூறினார்.


மேலதிக விபரங்களுக்கு...தொண்டர்மாமணி அசோகன் மூக்கன் ( தலைவர்) ..012 404  3704.   முருகன் கிருஷ்ணமூர்த்தி ( செயலாளர்).  ..017 615. 5657. - Alaiolinews

Post ImagePost Image

Leave a Comment
Trending News