Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம், ஏப்ரல் 17- மேற்காசிய போர்முனைப் பிரச்சினை மற்றும் அதன் பாதிப்பு தாக்கங்களைத் தொடர்ந்து மலேசிய ரீதியிலும் உள்நாட்டு மக்கள் எதிர் நோக்கி வரும் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு செயலகம் வாயிலாக மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னெடுத்து செயல்படுத்த விருக்கும் மக்கள் நலத் திட்டங்களுக்கு 131 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் செயல்பாடுகள் குறித்த நேரத்தில் மக்களை முறையாகச் சென்றடையும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
ஜெலாஜா ரஹ்மா திட்டத்தில் மாநில அளவில் செயல்படும் 56 சட்டமன்றங்களுக்கு 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மாநில அளவில் இருக்கும் 17,237 விவசாயிகளுக்கு உதவிநிதியாக 25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பாப்பா ராய்டு தெரிவித்தார்.
அதே வேளையில், 50 ஆயிரம் பேருக்கு 100 வெள்ளி மதிப்புள்ள பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும் என்றும் பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார்.
மாநில அளவில் இதே போன்ற மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்த விருக்கும் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறந்த மக்கள் நலத் திட்டமிடல் நடவடிக்கைகளை தாம் பெரிதும் வரவேற்பதாக பாப்பா ராய்டு தெரிவித்தார்.- Alaiolinews
சிலாங்கூர்
இவ்வாண்டில் தேசிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் காவல் கட்டுப்பாட்டு முகமை (ஏகெபிஎஸ்) க்கு ஆயுதங்கள் வழங்கப்படும்,உள்துறை அமைச்சர் அறிவிப்பு
சிலாங்கூர்
AKPS bakal dilengkapi penggunaan senjata api pada tahun ini - Menteri Dalam Negeri
பேராக்
தெலுக் இந்தான் பெக்கான் பாரு கொள்ளைச் சம்பவத்தில் முதியவர் கொலை ; 3 சந்தேக நபர்களை போலீசார் வலைவீச்சு
மலாக்கா
Pasangan ‘riba’ dalam bas ekpres dihukum penjara, denda RM10,000
பேராக்
கேட்டத் தருணத்தில் வீடு தேடி வரும் உதவிகள் – டத்தோ சிவநேசனின் சேவையைப் பாராட்டினார் கம்போங் டெலிமா தலைவர்!!
சிலாங்கூர்
மேற்காசிய போர்முனைப் பிரச்சினையின் எதிரொலியை எதிர் நோக்கும் சிலாங்கூர் மாநில அரசு மக்களுக்கு உதவிடும் மனித நேய அடிப்படையில் ரிம. 131 மில்லியன் ஒதுக்கீடு- பாப்பா ராய்டு தகவல்.
பேராக்
கோயில் என்றால் உயர்ந்து நிற்கும் கோபுரம் இருந்தால் அது கோயில் ; டத்தோ சிவநேசன் உரைத்தார்..!
சிலாங்கூர்
ஆலயத் தூண் சாய்ந்து மரணமுற்ற சீன மாணவிக்கு இடைநிலைப் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கண்ணீர் மழையில் இறுதி அஞ்சலியுடன் வழி அனுப்பினர்