அமெரிக்காவில் வான்கோவர் பகுதியில் நிகழ்ந்த அரிய சம்பவம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுமார் 31,000 கிலோ (அதாவது 31 டன்) தேன் கூடு ஏற்றிச் சென்ற ஒரு பெரிய லாரி நிலைதடுமாறித் தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த லாரி கவிழ்ந்ததுடன், அதிலிருந்த தேனீக்களின் கூட்டங்கள் உடைந்துபோயின. இதில் சுமார் 25 கோடி தேனீக்கள் வெளியில் பறந்து பரவின. அந்த பகுதியில் தேனீக்கள் ஏராளமாகப் பறந்ததால் மக்களுக்கு அபாயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் அந்த இடத்திற்கு மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.