Alaioli
டத்தோ’ ஸ்ரீ சுந்தராஜூ சோமு  பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் செயற்திட்டக் குழு உறுப்பினர் – ஊடக அறிக்கை


2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்கான தேசிய சொத்து தகவல் மையம் (NAPIC) வெளியிட்ட பினாங்கு மாநிலத்தின் சொத்துச் சந்தை அறிக்கையின் அடிப்படையில், மாநிலமெங்கும் மொத்தம் 2,796 வீட்டுகள் விற்பனைக்குத் தயாராக இருந்தும் விற்கப்படாத நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான வீடுகள் அடங்கும் என பினாங்கு மாநில வீடமைப்பு சூற்றுச்சூழல் ஆச்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்தார்.


இந்த வீடுகள் யாவும் மிகவும் விலை உயர்ந்த நிலையில் இதை கருத்தில் கொண்டு, பினாங்கு மாநில அரசு, 2025 மே 7 ஆம் நாள்  அன்று நடைபெற்ற மாநில செயற்திட்டக் குழு கூட்டம் (Bil. 14/2025) மற்றும் 2025 ஜூன் 3 நாள் அன்று நடைபெற்ற மாநிலத் திட்டமிடல் குழுக் கூட்டம் (Bil. 5/2025) ஆகியவற்றில், இத்துறை உறுதுணையாளர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், சொத்துத் துறையை மீண்டும் ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு முக்கிய  நடவடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இத்தகவலின் அடிப்படையில், மாநில அரசு, இந்திய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முதல்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு, ஒரு வருட காலத்திற்கு, தனியார் வீடமைப்பு திறுவனங்கள்  ஐந்து சதவீதம் (5%) தன்னிச்சையான தள்ளுபடி வழங்குவதைக் கூறி ஊக்குவிக்கின்றது. இந்தத் தள்ளுபடி, புமிபுத்ரா (Bumiputera) ஒதுக்கீட்டுக்குட்பட்ட வீடுகளுக்கு பொருந்தாது மற்றும் தற்போதைய வீடமைப்புக் கொள்கைகளில் எதையும் பாதிக்காது.



இந்தத் தள்ளுபடி திட்டம், கட்டுமான நிறுவனங்கள் அளிக்கும் சமூக பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக அமைகிறது. இதில் மாநில அரசின் எந்தவொரு நிதிச் சேவை அல்லது சலுகையும் உட்படாது. இதன் நோக்கம், வீடு வாங்கும் திறன் குறைந்திருக்கும் சமூகங்களுக்கு திறந்த சந்தையில் வீடு வாங்கும் வாய்ப்பை வழங்குவதுடன், பிற சமுதாயங்களின் உரிமைகளை பாதிக்காமல் செய்வதாகும் என டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு விளக்கமளித்துள்ளார்.


மாநில அரசு, புமிபுத்ரா ஒதுக்கீடு மற்றும் முதல்முறை வீடு வாங்குபவர்களுக்கான உள்ளடங்கிய நலத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து தற்போதைய வீடமைப்புக் கொள்கைகளும் தொடரும் என உறுதியளிக்கிறது. இந்தத் திட்டம், மக்களின் வீடுத் தேவையை பூர்த்தி செய்ய முன்வைக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக செயல்படுகிறது.


வீடு வாங்கும் நிலையை விரிவுபடுத்துவதுடன், கட்டுமானப் பொருட்கள் மற்றும் வேலைத்தளச் செலவின் உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சொத்துத் துறையையும் மீட்டெடுப்பதற்காக, இந்த முயற்சி அமல்படுத்தப்படுகின்றது. இது, பினாங்கு மாநில அரசு நோக்கி செல்கின்ற சமநிலை, மாறாத மற்றும் ஒடுக்கமறுக்கும் வளர்ச்சியின் ஒரு பகுதியாகும் என டத்தோ சுந்தராஜூ சோமு தெரிவித்துள்ளார்.

Leave a Comment
Trending News