கோலாலம்பூர், மே 10 –
இன்று அதிகாலை சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக 15 மாணவர்கள் உயிரிழந்த சோககரமான விபத்தினால் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ள குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க உயர்கல்வி அமைச்சகத்திற்கு வழிகாட்டுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு தொடர்பாக தனது இரங்கலைத் தெரிவித்து, “இந்தக் கவலையூட்டும் பேரழிவு, நம்மில் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கையாகவும், வருங்காலத்திற்கான விழிப்புணர்வாகவும் அமைய வேண்டும். எதையும் அவசரப்படுத்தாமல், எப்போதும் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். உங்கள் உயிர்கள் மிகவும் விலைமதிப்பற்றவை. அதற்கு மாற்று எதுவும் இல்லை,” என அவர் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
மாணவ வாழ்க்கையின் பயணத்தில் ஏற்படும் இத்தகைய பேரழிவுகள், பல குடும்பங்களை சோகத்தில் ஆழ்த்துகின்றன. எனவே, அனைவரும் தங்கள் பயணத்தில் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் நினைவுபடுத்துகிறது.