துன் சம்பந்தன் 106வது பிறந்தநாள் நினைவுக்கூறல்!!
சுங்கை சிப்புட்,ஜூலை02: ம இ காவின் 5வது தேசியத் தலைவரும் கூட்டுறவு தந்தையெனப் போற்றவும் படும் துன் சம்பந்தனின் 106வது பிறந்தநாள் நினைவுக்கூறலும் சிறப்பு பிராத்தனையும் நனிச் சிறப்போடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதன் ஏற்பாடு குழு தலைவர் திரு.கி.மணிமாறன் தெரிவித்தார்.
இச்சிறப்பு மிகு நிகழ்வு வருகின்ற 13.07.2025,ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9.00தொடங்கி சுங்கை சிப்புட் தோட்டம் 5வது மைல்லில் அமைந்துள்ள துன் சம்பந்தன் மண்டபத்தில் நடைபெறுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
பல்வேறு பிரமுகர்களும் பொது மக்களும் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் துன் சம்பந்தனின் வாழ்வும் அர்ப்பணிப்பும் நினைவுக்கூறப்படும் என்றும் கூறிய மணிமாறன் பல்வேறு பொருள்பதிந்த அங்கமும் இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமையும் என்றார்.
மேலும்,சுங்கை
சிப்புட் உட்பட
ஈப்போ,கோலாலம்பூர்,
பினாங்கு என பல்வேறு ஊர்களிலிருந்து முக்கிய பிரமுகர்களும் இதில் கலந்து
கொள்வதாகக் குறிப்பிட்டார்.
