Alaioli
ஜொகூர் மாநிலத்தில் நதிகள் மாசுபாடு சம்பவங்கள்.புதிய விதிகள் அறிமுகம் !  லிங் தியான் சூன்

கோகி கருணாநிதி

ஜொகூர் பாருடிச.2—ஜொகூர் மாநிலத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்த நதிக் களங்கச் சம்பவங்களைத் தடுக்க, மாநில அரசு விரைவில் புதிய மற்றும் கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜொகூர் மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழுத் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்துள்ளார்.



தொழிற்துறைகளின் செயல்பாடுகளை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகள், குறிப்பாக ஜொகூர் நதியில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டைப் போன்ற நிகழ்வுகள் இனிமேலும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளன எனவும் அவர் கூறினார்.



“நீண்டகால திட்டமிடலில், மாநில அரசு எந்த விதிமுறைகளைக் கொண்டு வருகிறது, அவற்றை எல்லா தொழிற்துறைகளும் கட்டாயமாகப் பின்பற்றும் வகையில் என்னென்ன நடைமுறைகள் அமல்படுத்தப்படும் என்பதைக் குறித்துச் சம்பந்தப்பட்ட ஆட்சிக்குழு விரைவில் விரிவான விளக்கத்தை வழங்கும். தற்போதைய சம்பவத்திற்குத் தொடர்பான விசாரணை நிலப்பரப்பு மற்றும் சுரங்கத் துறை உள்பட பல்வேறு அரசு அமைப்புகளால் முன்னெடுக்கப்படுகிறது,” என அவர் தெரிவித்தார்.



அதே சமயம், இந்த மாசுபாட்டுக்குப் பொறுப்பான தரப்புகளை நீதிமன்றத்தில் நிறுத்த மாநில அரசு தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் லிங் தியான் சூன் உறுதிப்படுத்தினார்.
“நாம் ஏற்கனவே நடவடிக்கைத் திட்டத்தைத் தயாரித்து சட்டத்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம். இப்போது தீர்ப்புக்காகக் காத்திருக்கிறோம்,” என்றார்.


லிங் தியான் சூன்ஜொகூர் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையின் புணர்வாழ்வு மருத்துவப் பிரிவிற்கு லட்டே கெமிக்கல் டைட்டன் (மலேசியா) நிறுவனம் வழங்கிய மருத்துவ உபகரண நன்கொடைகளை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின் ஊடகச் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வு “உலக மாற்றுத்திறனாளிகள் தினம்” நினைவாக நடைபெற்றது.



கடந்த அக்டோபர் 31 அன்று, கோத்தா திங்கியில் உள்ள ஒரு நிலவள மணல் சுரங்கப் பகுதியில் அமைந்திருந்த மணல் கழுவும் குளம் உடைந்து, அதன் கழிவுநீர் ஜொகூர் நதியின் மேல் ஓட்டத்துக்குக் கலந்தது. இதன் விளைவாக, வழக்கமான 400 NTU அளவிலிருந்து நேரடியாக 7,000 Nephelometric Turbidity Unit (NTU) அளவுக்கு நீரின் குள்மை திடீரென உயர்ந்தது.


இந்த சூழ்நிலை காரணமாக லிங்கியுஸ்மாங்கார்ஜொகூர் நதி மற்றும் தாய் ஹோங் நீர் வடிகட்டி நிலையங்கள் உட்படப் பல நிலையங்களின் செயல்பாடுகள் படிப்படியாக நிறுத்தப்பட்டதால், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் தண்ணீர் விநியோகத் தடையை எதிர்கொண்டனர்.ஜொகூர் மாநிலத்தில் ஏற்பட்ட இந்த நீர்மூல மாசுபாடு மாநில வரலாற்றிலேயே மிகக் கடுமையான மற்றும் பாதிப்பு அதிகம் கொண்ட நிகழ்வுகளில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது.

Post ImagePost ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News