Alaioli
முன்னாள் மக்களவை சபாநாயகர் ரம்லி ஙா தாலிப், மே 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பினாங்கின் ஒன்பதாவது யாங் டி-பெர்துவா நெகிரி (Yang di-Pertua Negeri) ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனப் பத்திரத்தை, இன்றைய நிகழ்வில், இஸ்தானா நெகாராவின் தேவான் சிங்காஸானா கெசிலில் நடந்த நிகழ்வில், யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராகிம் வழங்கினார்.
84 வயதான ரம்லிக்கு, "துன்" பட்டத்துடன் கூடிய ஶ்ரீ மகராஜா மாங்கூ நெகாரா (Seri Maharaja Mangku Negara) விருதும் அளிக்கப்பட்டது.
பினாங்கு மாநில அரசியல் சட்டத்தின் பிரிவு 1-ன் அடிப்படையில், மே 1, 2025 முதல் ஏப்ரல் 30, 2029 வரை நான்கு ஆண்டுகள் காலத்திற்காக அவரது நியமனம் மேற்கொள்ளப்பட்டது.
இப்பதவியில், கடந்த 2021 மே 1 முதல் பதவியில் இருந்த அஹ்மட் ஃபூஸி அப்துல் ரசாக்க்கின் பதவிக்காலம் நீடிக்கப்படவில்லை.
நியமன விழாவில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் பினாங்கு முதல்வர் சௌ குவான் இயோவும் கலந்துகொண்டனர்.
அத்துடன், தலைமை செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபூ பாக்கர், மக்களவை சபாநாயகர் ஜொஹாரி அப்துல், தேவான் நெகாரா தலைவர் அவாங் பெமீ அவாங் அலி பசா, மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் மற்றும் துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
முன்னதாக, ரம்லி 1982 முதல் 1999 வரை 17 ஆண்டுகள் பேராக் மாநிலத்தின் எட்டாவது மந்திரிய் பெசார் (முதல்வர்) ஆகவும் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜொகூர்
Gangguan bekalan air berjadual di daerah Johor Bahru, Kota Tinggi dan Pontian
கோலாலம்பூர்
Piala Thomas 2026: Malaysia 'kuda hitam' di Denmark, kata Zii Jia
கால்பந்து
Piala Dunia 2026: FIFA desak Donald Trump tangguh operasi ICE, bimbang cetus kekacauan
கோலாலம்பூர்
Himpunan GARAH: Anwar, kerajaan dan lima lain diarah fail pembelaan sebelum 21 Mei depan
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் வாழும் சீக்கிய பெருமக்களுக்கு வைசாக்கி புத்தாண்டு வாழ்த்துகள்
புத்ராஜெயா
Sindiket pemalsuan dokumen pekerja asing lumpuh, dalang utama warga Nepal turut dicekup Imigresen
அமெரிக்கா
Perang Iran hampir tamat, kata Presiden AS Donald Trump
நெகிரி செம்பிலான்
Sekolah tidak boleh tahan sijil, dokumen rasmi pelajar – JPNS