Alaioli
மணல் தேக்கும் முழுப்பனிக்காலையிலும்
கரும்புளி சுவரின் பிழம்படித்த ஒளியில்
வியர்வை சிந்திய அந்த கைதான்..,
இப்போது வானைப் பார்த்துக் கை கட்டி நிற்கிறது!

எங்கே தவறு செய்தான் அவன்?
தத்துவமாய் உழைத்ததற்கா?
தன்ஆயுள் முழுவதும் திருச்சீலையாக
தந்தையின் கடன் மிச்சத்தைக் கழிப்பதற்கா?

துப்பாக்கியின் நுனியில்
சட்டம் பேசுகிறது —
ஆனாலும் சட்டம் எங்கே?
சட்டம் சுடுகிறது!
முகக்கவசத்தில் மறைந்த அதிகாரி,
மறையாமல் மிரட்டுகிறான்.
உணர்வு இழந்த இரும்பு கம்பிகளுக்குள்
மனித உரிமைகள் உருண்டு விழுகிறது.

மனிதம் தேடி வந்த அதிகாரிகள்,
மனிதனை மிரட்டி விட்டனர்.
நீதி காக்க வந்த நெறியாளர்கள்,
நெஞ்சை ஈரம்செய்தனர்.
இது விசாரணையா?
இல்லை, இது வெறும் மிரட்டலோ?
வியாபாரிகள் தவறுகள் செய்திருந்தால்
பணியாளர்களை ஏன் சிதைக்கின்றீர்கள்?

சீல் வைத்தீர்கள்..,
ஆனாலும் செயல்வீரம் விட்டுச் சீறுகிறது மக்கள் மனம்,
“மடானியின் முகமா இது?” என
நாடே கோபத்தில் கனல் கொள்கிறது.
ஏன் இந்த அவமதிப்பு?
ஏன் இந்த அடக்குமுறை?
வெறும் வேலைக்காரன் தான் என்று
விலங்காய் நடத்துவது எந்த நீதியின் கீழ்?

காலம் இதை மறந்தாலும்
கண்ணீர் சொதுங்கும் அந்தக் கைகளில்
புகார் பதிந்திருக்கும்…
ஒரு ஜனநாயகத்தின் குருதி கறைபடிவம்.
செ.குணாளன்
நீதிமன்றம்
Kapten tentera didakwa membunuh, pandu mabuk di mahkamah
சிலாங்கூர்
Polis buru suspek bakar dua kenderaan di perumahan di Klang
கோலாலம்பூர்
Lelaki rentung dalam insiden lima rumah teres terbakar di Kepong
சிலாங்கூர்
நேற்று மாலையில் வீசிய பலத்த புயல் காற்றில் தெலுக் டத்தோ தமிழ்ப் பள்ளி உட்பட பல இடங்களில் சேதம்-பாப்பா ராய்டு நேரில் சென்று பார்வையிட்டார்.
சிலாங்கூர்
குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடும் கேடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவன குத்தகைப் பணியாளர்கள் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
சிலாங்கூர்
வாத நோயால் அவதியுறும் நோர்வானி துணைவர் நலம் பெற புஷ்பா ராஜனின் மனித நேய உதவிகள்
மலேசியா
மலேசியத் தமிழர்களின் விடியலின் முன்னோடி: டான் ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன்
கோலாலம்பூர்
மலேசியத் தமிழர்களின் விடியலின் முன்னோடி: டான் ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்புக் கட்டுரை.