Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங், ஏப்ரல் 30 - நேற்று மாலை நேரத்தில் வீசிய பலத்த புயல் காற்றின் காரணமாக, பந்திங் வட்டாரத்தில் உள்ள தெலுக் டத்தோ தமிழ்ப் பள்ளி மற்றும் பல இடங்களில் அதிகமான பாதிப்பையும் பலத்த சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தை அறிந்த மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான், புயல் சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட தெலுக் டத்தோ தமிழ்ப் பள்ளியின் நிலவரங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

பள்ளித் தலைமையாசிரியர் கணேஷ் இராமசாமி, பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் உயர் அதிகாரி கண்மணி பெரியண்ணன், கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர்களான நடேசன் சுப்ரமணி, இளையராஜா பழனிச்சாமி, இந்திய சமூகத் தலைவர் சாமிதுரை ஆகியோருடன் தெலுக் டத்தோ தமிழ்ப் பள்ளி வளாகத்தில் ஏற்பட்டிருந்த சேதங்களைப் பார்வையிட்டப் பின் பள்ளி மாணவர்களின் கல்வி தடைப்படாமல் இருக்கும் வகையில் புயலில் ஏற்பட்டுள்ள சேதம் பழுதுகளை மேற்கொள்ள உடனடி நடவடிக்கை கள் விரைந்து எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
கடுமையான புயலின் சீற்றத்தால், சுங்கை மங்கீஸ் சமூக மண்டபம், கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் பார்வையில் செயல்படும் 3 அங்காடிக் கடைகள், மக்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள 5 வீடுகள், சுங்கை மங்கீஸ் சமயப் பள்ளி, ஜாய்ஸ் கண்காணிப்பில் உள்ள ஒரு கடை, மற்றும் இவ்வட்டாரத்தில் சுற்றுப் புறங்களில் 6 இடங்களில் மரங்கள் சாய்ந்து கிடந்த விவரங்களை பாப்பா ராய்டு அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசு இதற்கான அவசர உதவிகளை முன்னெடுத்து செயல்படுத்தும் என்றும் பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார்.

புயல் சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை தம்மோடு பார்வையிட வந்திருந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.- Alaiolinews






சிலாங்கூர்
கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சிறந்த சேவையாளர் களுக்கு பாராட்டுப் பத்திரம்
சிலாங்கூர்
Syarikat tempatan buat pengisytiharan palsu, 10 kontena e-waste berjaya dikesan AKPS Klang
நீதிமன்றம்
Kapten tentera didakwa membunuh, pandu mabuk di mahkamah
சிலாங்கூர்
Polis buru suspek bakar dua kenderaan di perumahan di Klang
கோலாலம்பூர்
Lelaki rentung dalam insiden lima rumah teres terbakar di Kepong
சிலாங்கூர்
நேற்று மாலையில் வீசிய பலத்த புயல் காற்றில் தெலுக் டத்தோ தமிழ்ப் பள்ளி உட்பட பல இடங்களில் சேதம்-பாப்பா ராய்டு நேரில் சென்று பார்வையிட்டார்.
சிலாங்கூர்
குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடும் கேடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவன குத்தகைப் பணியாளர்கள் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
சிலாங்கூர்
வாத நோயால் அவதியுறும் நோர்வானி துணைவர் நலம் பெற புஷ்பா ராஜனின் மனித நேய உதவிகள்