Alaioli
கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சிறந்த சேவையாளர் களுக்கு பாராட்டுப் பத்திரம்

எஸ்.எஸ்.மணிமாறன் 

பந்திங், ஏப்ரல் 30 -  கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சிறந்த சேவையாற்றி வரும் காவல் அதிகாரிகள் பாராட்டுப் பத்திரங்கள் பெற்றனர். 


பந்திங் போலீஸ் நிலையத்தின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த ஆண்டில் சிறந்த சேவையாற்றிய காவல் அதிகாரிகளுக்கு போலீஸ் படைத் தலைவர் சூப்ரிண்டன் முகமட் அக்மால்ரிஸால் ரட்சி பாராட்டுப் பத்திரங்கள் எடுத்து வழங்கி அவர்களை வாழ்த்தினார்.



பாராட்டு பத்திரங்கள் கிடைக்கப் பெறாமல் இருக்கும் காவல் அதிகாரிகள் மனம்  தளராமல் தங்களது சேவைகளை முன்னிறுத்தி அதிகரிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டில் இதே போன்ற நிகழ்ச்சியில் அவர்களும் பாராட்டுப் பத்திரங்களைப் பெற முடியும் என்று கூறினார்.


கோலலங்காட் மாவட்ட ரீதியில் தற்போது குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாக சூப்ரிண்டன் முகமட் அக்மால்ரிஸால் தெரிவித்தார்.  முன்னதாக, காவல் துறையினரின் அணிவகுப்பை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.


போலீஸ் சட்டத்தைப் பேணிக் காப்போம் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற போலீஸ் அதிகாரிகள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.


இந்தப் பாராட்டுப் பத்திரங்கள் பெறும் நிகழ்ச்சியில் 54 பேருக்கு பத்திரங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.-Alaiolinews

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News