Alaioli
டிகே.மூர்த்தி
தெலுக் இந்தான், ஏப்ரல் 17-மாணவர்கள் மத்தியில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய 4 முக்கிய துறைசார் பாடங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
நவீன கல்வி அணுகுமுறைதான் (STEM) ஸ்டெம் ரீதியில் இன்று இங்குள்ள சிதம்பரம்பிள்ளை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீ முருகன் குமரேசன் முன்னெடுப்பில் இப்பள்ளி மாணவர்களுக்கு சூரியசக்தி மின்சாரம் (சோலார்) குறித்த செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

சிலாங்கூர் ஷா ஆலம் சேர்ந்த (PANITIA SAINS DAN PANITIA RBT) நிறுவனத்தார் முற்றிலும் இலவசமாக நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
இதற்குக் காரணகர்த்தாவாக இருந்தவர் முன்னாள் ஜெண்டராட்டா-3 மண்ணின் மைந்தர், சமுதாயப் பற்றாளர் நாகலிங்கம் முனுசாமி என்பதை நெஞ்சில் கொள்வோம். இன்றையக் காலக்கட்டத்தில் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தும் நோக்கத்தில் (சோலார்) சூரிய மின்சக்தி மூலம் நேரடியாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத வகையிலும், அதே நேரத்தில் பயனீட்டாளர்களின் பராமரிப்புச் செலவு சிக்கனமாகவும் இருப்பது உறுதியாகியுள்ளது.

தற்பொழுது கீழ்ப்பேரா, பாகான் டத்தோ, சுங்காய், சபாக் பெர்ணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலை உரிமையாளர்கள், இயற்கையின் பரிசாக இந்த சோலார் மின்சாரத்தை அமைத்துள்ளனர்.
இதன் மூலம் பல கோடி ரிங்கிட் செலவு மிச்சப்படுத்தியுள்ளனர். தொழிற்சாலை மட்டுமின்றி புறநகர் பகுதியை சார்ந்த ஒவ்வொரு வீட்டிலும் சோலார் மினசாரம் அமைத்துள்ளனர்.

அவர்கள் அதிக மின்சாரக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலகியுள்ளனர். அந்நிலையில், சோலார் மின்சாரம் குறித்த விளக்கத்தை அந்தத் தனியார் நிறுவனத்தார் புரிந்துக் கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு விளக்கம் தந்தனர்.
இது போன்ற நிகழ்வு மூலம் மாணவர்களுக்கு தேவையான “கற்றல் கற்பித்தல்” முன்னெடுப்பதில், இப்பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்ரீ முருகன் தனித்துவம் பெற்றுள்ளார்.

இவர் எப்போதும் மிகுந்த சுறு சுறுப்புடன் இருப்பதைப் பார்க்கலாம். மொத்தத்தில், எல்லா பள்ளித் தலைமையாசிரியர் என்பவர்கள் திட்டமிட்டுச் செயல்படுவதால், நம் மாணவர்கள் கல்வியில் வெற்றிப் பெற்று வருகின்றனர்.
இந்நிகழ்வுக்கு மாவட்டக் கல்வி இலாகா அதிகாரிகள் இருவர் வருகை அளித்துள்ளனர். அவர்களுக்கும் சோலார் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. அவர்கள் இப்பள்ளி தலைமையைக் குறித்த பாராட்டுகளையும் தெரிவித்தனர். - Alaiolinews



சிலாங்கூர்
ஆலயத் தூண் சாய்ந்து மரணமுற்ற சீன மாணவிக்கு இடைநிலைப் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கண்ணீர் மழையில் இறுதி அஞ்சலியுடன் வழி அனுப்பினர்
பேராக்
Perak terima 29,310 permohonan pendaftaran Tahun Satu bagi sesi 2027
கெடா
57 anggota PGA digerakkan ke 13 stesen minyak 'hot spot' di sempadan Malaysia-Thailand elak ketirisan bahan api subsidi
சிலாங்கூர்
செமினி, இனிய நந்தவனம் இலக்கிய விழாவில் , சிலாங்கூரில் 3 பெண்மணிகள் தமிழ்மாமணி விருது பெறுகின்றனர்
திருக்கோவில்
நூறாண்டுகள் பழைமையான ஜூக்ரா கருமாரியம்மன் ஆலயத்தில் வருடாந்திர தீமிதி திருவிழா
ஜொகூர்
ஊடகப் பணியாளர்களுக்கு 300 லிட்டர் ரோன்95 பெட்ரோல் ஒதுக்கீடு தொடர வேண்டும் – ஊடக அமைப்புகள் கோரிக்கை.
பேராக்
வெற்றிக்கு வித்திடும் சூரியசக்தி மின்சாரம் குறித்து சிதம்பரம்பிள்ளை பள்ளி ஆர்வம்..!
கிளாந்தான்
Sindiket kaut untung RM15,000 satu kepala seludup PATI tersungkur, 37 warga Myanmar ditangkap PGA