Alaioli
நூறாண்டுகள் பழைமையான ஜூக்ரா கருமாரியம்மன் ஆலயத்தில் வருடாந்திர தீமிதி திருவிழா

எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங், ஏப்ரல் 17- இங்கு, ஜூக்ரா தோட்டப் பாட்டாளிகள் வழிபாட்டுத் தலமாக நூறாண்டுகளுக்கு முன்பு உருவான அருள் மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் வரும் 2,.5.2026 சனிக்கிழமை அன்று மாலையில் தீ மிதித் திருவிழா சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெறவிருப்பதாக ஆலயத் தலைவர் எம்.ராஜதுரை அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


தோட்டம் மேம்பாட்டுத் திட்டங்கள் வருகையால் தொலைந்த போதிலும், ஆலயம் இங்கே நிலை பெற்று நீண்ட காலமாக ஆலய நிர்வாகத்தினர் கட்டுக் கோப்பான செயல்பாடுகளால் ஆலய நடவடிக்கைகள் தங்கு தடையின்றி சிறப்பாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.


எனவே, உள்ளூர் வெளியூர் பக்தர்கள் மட்டும் இன்றி தோட்டத்தை விட்டு தொலைதூரம் இடம் பெயர்ந்து சென்று வாழ்ந்து வரும் அனைவரும் தொடர்ந்து நடைபெற விருக்கும் ஆலயத் திருவிழாவில் பங்கேற்று அம்பிகையின் அருட் கடாட்சம் பெற்றுய்யுமாறு ராஜ துரை அழைப்பு விடுத்துள்ளார்.- Alaiolinews

Post ImagePost Image

Leave a Comment
Trending News