Alaioli
சிலாங்கூர் மாநில அளவில் தமிழோடு பொதுச் சேவையாற்றி வரும் மூன்று தமிழ்ப் பெண்மணிகளுக்கு ' தமிழ் மாமணி ' விருது வழங்கி கௌரவிப்பு.

எஸ்.எஸ்.மணிமாறன்.

செமினி ஏப்ரல் 8.  இதுகாறும் தொடர்ந்து இடைவிடாது தமிழோடு பொதுச் சேவையிலும் மக்கள் நலனிலும் தொண்டாற்றி வரும்  சிலாங்கூர் மாநிலத்தில் வசித்து வரும் மூன்று தமிழ்ப் பெண்மணிகள் தெரிவு செய்யப்பட்டு தமிழ் மாமணி விருது வழங்கி கௌரவிக்கப் பட விருக்கின்றனர். 


சுங்கை பூலோ ஆர் ஆர் ஐ தமிழ்ப் பள்ளி த் தலைமையாசிரியர் திருமதி புஷ்பராணி கிருஷ்ணன், கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் உறுப்பினர் திருமதி புஷ்பா நாகையா வெங்கடேசன் மற்றும் (பெஸ்தாரி ஜெயா ) பத்தாங் பெர் சுந்தை   கெ அடிலான் மகளிர் அணித் தலைவி திருமதி ஜெகதீஸ்வரி வேலு ஆகிய மூவரே இந்த விருது பெற விருக்கும் பெண்கள் என்று  இனிய நந்தவனம் இதழாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் 19.4.2026 மாலை 5.30  மணியளவில் செமினி, 3-1 ஜாலான் செமினி சென்ட்ரல் 6, செமினி சென்ட்ரல், சிலாங்கூர் எனும் முகவரியில் அமைந்துள்ள பன்முகத் தமிழ்ச் செல்வர் நா.ஆ.செங்குட்டுவன் அறிவுச் சோலை மண்டபத்தில் நடைபெறும் என்று அவர் அலை ஒளியிடம் கூறினார்.  தமிழ் மாமணி விருது பெற விருக்கும் பெண்மணிகளுக்கு முன் கூட்டியே அலை ஒளி ஊடகத்தின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்

Post ImagePost Image

Leave a Comment