Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங், ஏப்ரல் 29 - துவான் ஹாஜி ஹஸ்னுல் பகாருடின், மோரிப் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமனம் பெற்றார். இவர் கடந்த காலங்களில், மோரிப் சட்ட மன்ற உறுப்பினராக சேவையாற்றி வந்துள்ளார்.

அதே வேளையில், பந்திங் வட்டாரத்தில் நன்கு பிரபலமான தாமான் டெலிமா குடியிருப்பாளர்கள் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளரான லாவ் கோக் ஹூவா மோரிப் சட்ட மன்ற சீன வம்சாவளியினரைப் பிரதிநிதித்து சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் வாயிலாக சிறப்பு அதிகாரியாக நியமனம் பெற்றார்.

இந்த நியமனம் கடந்த 1.2.2026 முதல் நடப்புக்கு வருவதாக லாவ் கோக் ஹூவா அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ பொறியியலாளர் இஸாம் ஹஷிம் இருவரையும் மோரிப் சட்ட மன்றத் தொகுதி சிறப்பு அதிகாரிகளாக நியமித்துள்ளார்.

மோரிப் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலக உயர் அதிகாரி கைருல் நிஜாம் தோஹார் நியமனக் கடிதங்களை எடுத்து வழங்கி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.-Alaiolinews


சிலாங்கூர்
ஹாஜி ஹஸ்னுல் மோரிப் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமனம்
பேராக்
பேரா மாநில இந்தியர்களின் இதயங்களில் நிலைக்கச் செய்த இந்திய சமூக நல விவகார தலைமைத்துவம் ; வூ காஹ் லியோங் மகிழ்ச்சி..!
சிலாங்கூர்
லீமாஸ் எனப்படும் இஸ்லாம் அல்லாத வழிப்பாட்டுத் தலங்களுக்கு தொடரும் மாநில அரசின் உதவிகள்- பாப்பா ராய்டு
பினாங்கு
தெலுக் இந்தான் சித்ரா பௌர்ணமி விழாவின் போது நெகிழியை பயன்படுத்த வேண்டாம்! உணவை விரயமாக்க வேண்டாம்! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!
சிலாங்கூர்
கோல சிலாங்கூர் கமாசான் தோட்டத்தில் மகா துர்க்கையம்மன் ஆலயத்தில் வரும் 3.5.2026இல், 135 ஆவது வருடாந்திர சித்திரைத் திருவிழா
கெடா
Suami pukul isteri hingga keguguran, cedera parah direman 7 hari
சிலாங்கூர்
Anwar potong rambut di kedai, netizen puji kacak
பினாங்கு
இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவர்களுக்கு உதவும் வழிகாட்டி கருத்தரங்கு