Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம் ஏப்ரல் 29 - லீமாஸ் எனப்படும் இஸ்லாம் அல்லாத வழிப்பாட்டுத் தலங்களான புத்தம், கிறிஸ்தவம், இந்து, சீக்கியம், தாவோ ஆகிய வழிபாட்டுத் தலங்களின் வளர்ச்சியிலும் பங்களிப்பிலும் சிலாங்கூர் மாநில அரசின் உதவிகள் தங்கு தடையின்றி தொடரும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் இங்கு, மாநில சட்ட மன்ற 15 ஆவது கூட்டத் தொடரில் தமது கருத்தை முன் வைத்துப் உரையாற்றிய அவர் மேற்கொண்ட தகவலை வெளியிட்டார்.
எனினும், சொந்த நிலம் தனியார் நிலங்களில் அமையப் பெறும் வழிப்பாட்டுத் தலங்கள் வளர்ச்சிக்கான உதவிநிதி கோரும் ஆலய நிர்வாகத்தினரின் மனுக்கள் நிராகரிக்கப்படலாம் அல்லது ஒத்தி வைத்து பரிசீலிக்கப் படலாம் என்றும் அவர் கூறினார்.
அதே வேளையில், சிலாங்கூர் மாநில அளவில் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் 669 வழிப்பாட்டுத் தலங்களுக்கு மாநில அரசின் வாயிலாக 3.7 மில்லியன் ரிங்கிட் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டில் வழங்கப்பட்டதாக பாப்பா ராய்டு சட்டமன்றக் கூட்டத் தொடரில் விவரித்தார்.
புத்த ஆலயங்களுக்கு 3.7 மில்லியன், இந்து ஆலயங்களுக்கு 1.65 மில்லியன், தேவாலயங்களுக்கு 541, 650 ரிங்கிட் மற்றும் குர்ட் வாரா சீக்கிய வழிப் பாட்டுத் தலங்களுக்கு 78, 200 ரிங் கிட் என வழிப் பாட்டுத் தலங்களுக்கான மானியத் தொகை முன்னெடுக்கப்பட்டு அதன் தலைவர் களிடம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
மாநில அளவில் பல வழிபாட்டுத் தலங்கள் சொந்த நிலத்தில் அமையாத பட்சத்தில் பல்வேறு இழுப்பறிக்கு இடையே , இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணும் வகையில் மாநில அரசுடன் இணைந்து தமது பங்களிப்பை ஆலய வளர்ச்சிக்கு தொடர்ந்து வழங்கி வருவதாக பாப்பா ராய்டு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.-Alaiolinews
சிலாங்கூர்
ஹாஜி ஹஸ்னுல் மோரிப் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமனம்
பேராக்
பேரா மாநில இந்தியர்களின் இதயங்களில் நிலைக்கச் செய்த இந்திய சமூக நல விவகார தலைமைத்துவம் ; வூ காஹ் லியோங் மகிழ்ச்சி..!
சிலாங்கூர்
லீமாஸ் எனப்படும் இஸ்லாம் அல்லாத வழிப்பாட்டுத் தலங்களுக்கு தொடரும் மாநில அரசின் உதவிகள்- பாப்பா ராய்டு
பினாங்கு
தெலுக் இந்தான் சித்ரா பௌர்ணமி விழாவின் போது நெகிழியை பயன்படுத்த வேண்டாம்! உணவை விரயமாக்க வேண்டாம்! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!
சிலாங்கூர்
கோல சிலாங்கூர் கமாசான் தோட்டத்தில் மகா துர்க்கையம்மன் ஆலயத்தில் வரும் 3.5.2026இல், 135 ஆவது வருடாந்திர சித்திரைத் திருவிழா
கெடா
Suami pukul isteri hingga keguguran, cedera parah direman 7 hari
சிலாங்கூர்
Anwar potong rambut di kedai, netizen puji kacak
பினாங்கு
இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவர்களுக்கு உதவும் வழிகாட்டி கருத்தரங்கு