Alaioli
கோல சிலாங்கூர் கமாசான் தோட்டத்தில் மகா துர்க்கையம்மன் ஆலயத்தில்  வரும் 3.5.2026இல், 135 ஆவது வருடாந்திர சித்திரைத் திருவிழா

எஸ்.எஸ்.மணிமாறன்

கோல சிலாங்கூர் ஏப்ரல் 29-  கோல சிலாங்கூர், ரவாங் சாலையில் அமைந்துள்ள கமாசான் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள நூறாண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ மகா துர்க்கையம்மன் ஆலயத்தில் 135 ஆவது வருடாந்திர சித்திரைத் திருவிழா வரும் 3.5.2026 ஞாயிறு அன்று சிறப்பு வழிபாடு பூஜை புனஸ்காரங்களுடன் நடைபெறவிருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தனர். 


அன்று காலை நேரத்தில், தாமான் கமாசான் மக்கள் குடியிருப்புப் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய சன்னதியில் இருந்து பக்தர்கள் பால் குடங்கள் ஏந்தி ஊர்வலமாக ஆலயம் வந்தடைந்து தொடர்ந்து நடைபெறும் பாலாபிஷேகத்தில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவர் என்று ஆலயத் தலைவர் நா.குருசாமி அலை ஒளியிடம் கூறினார்.


அன்றைய தினம் காலை 10 மணியளவில் கம்போங் குவாந்தான் ஆற்றங்கரையில் நடைபெறும் வழிபாட்டைத் தொடர்ந்து பக்தர்கள் ஆலயம் முன்பு வைக்கப்பட்டிருக்கும் பூக்குளியில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர் என்று குருசாமி தெரிவித்தார்.


கமாசான் தோட்டத்தை விட்டு வெளியூர்களில் வசிப்போரும் உள்ளூர் வெளியூர் பக்தர்களும் திரண்டு வந்து அம்பிகையின் அருட் கடாட்சம் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் அன்போடு அழைப்பு விடுத்துள்ளனர். 


மேலதிக விபரங்களுக்கு...நா.குருசாமி ( ஆலயத் தலைவர் ) .012 6572 209.- Alaiolinews

Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News