Alaioli
பேரா மாநில இந்தியர்களின் இதயங்களில் நிலைக்கச் செய்த இந்திய சமூக நல விவகார தலைமைத்துவம் ; வூ காஹ் லியோங் மகிழ்ச்சி..!

டிகே.மூர்த்தி

தெலுக் இந்தான், ஏப்ரல் 29- தெலுக் இந்தான் நாடாளுமன்ற பாசீர் பெர்டாமர் ஜசெக சட்டமன்ற உறுப்பினரும், உள்நாட்டு வாணிப அமைச்சின் பேரா ஆட்சிக்குழு உறுப்பினருமான வூ காஹ் லியோங், இங்குள்ள நாட்டுக் கோட்டை செட்டியார் சமூகத்தினர் நடத்தி வரும் அருள்மிகு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் சித்திராப் பௌர்ணமி திருவிழா நாளை மறுநாள் 01.05.2026 வெள்ளிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு இன்று காலை (29.04.2026) 9.00 மணிக்கு முன்கூட்டியே கோயில் நிருவாகத்தினரை வீடமைப்பு ஊராட்சி அமைச்சர் ஙா கோர் மிங் சார்பில் சந்தித்துள்ளார். 


அந்நிலையில் குறிப்பிட்ட திருவிழா அன்று தாம் கலந்துக் கொள்ளாமல் போனதற்கு மன்னிப்புக் கோரினார். சிறப்பு பூஜைக்குப் பின்னர் கோயில் நிருவாகம் தமக்கு வழங்கிய மாலை மரியாதைக் குறித்த அமைச்சரின் சார்பில் நன்றி பகிர்ந்துகொண்டார்.


அப்போது அவர் ஊடகவியாளர் சந்திப்பில் பேசுகையில், நம்பிக்கை கூட்டணி (பக்காத்தான் ஹரப்பான்) கடந்த 2008 ல், பேராவில் ஆட்சி அமைக்க மாநில இந்திய சமூகத்தினர் வீறுகொண்டு எழுந்த ஆதரவினால், பேராவில் ஆட்சி அமைக்க முக்கியக் காரணமாக இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர் என்றும் வூ காஹ் லியோங் கூறினார். 


அந்நிலையில், மாநில ஆட்சிக்குழுவில் இஸ்லாம் அல்லாதார் அமைப்பில் இந்திய சமூக நல விவகாரம் என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டது.


அதற்கான பொறுப்பை டத்தோ சிவநேசனிடம் அரசாங்கம் ஒப்படைத்தது. மேலும் 2008 ஆண்டில், மாநில இஸ்லாம் அல்லாதார் பிரிவுக்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆண்டுக்கு ரிம 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அடுத்து (2018) அந்தத் தொகை ஆண்டுக்கு ரிம 100 லட்சமாக அதிகரிக்கப்பட்டது.


தொடர்ந்து 2022 முதல் 2026 வரை ஆண்டுக்கு ரிம 120 லட்சமாக உயர்த்தி பேரா மாநில இஸ்லாம் அல்லாதார்  சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டது என்றும் வூ காஹ் லியோங் சுட்டினார். 


பேராவில் இந்திய சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட ஆண்டுக்கு ரிம 60 லட்சம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு பேரா அரசின் சார்பில் ஆண்டுக்கு ரிம 10 லட்சம் நிதி (கல்வி அமைச்சு வழங்கும் நிதி இதில் இணைக்கப்படவில்லை) அங்கீகாரம் என்பது எதிர்கட்சியாக இருந்துள்ள ஜசெகவுக்கு ஆதரவு வழங்கி மாநில அரசாங்கத்தில் அமர்த்தி சேவை செய்வதற்கு வாய்ப்பு கொடுத்துள்ள இந்திய வாக்காளர்கள் மூலம் அடுத்த பொதுத் தேர்தலிலும் இந்த வெற்றி தொடரும் என்பதில் நானும்.


அமைச்சர் ஙா கோர் மிங் மற்றும் டத்தோ சிவநேசனும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.  


ஒரு வேளை ஜசெக அரசாங்கத்தில் இடம் பெறாமல் இருந்தால் இந்த நிதி வழங்கப்பட்டிருக்குமா? என்பது உங்களுக்கு தான் தெரியும்.


அந்த வகையில் இந்த நிதி ஒதுக்கீடு குறித்த பெர்லிஸ் முதல் ஜோகூர் மற்றும் சபா சரவாக் மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கூறிய வூ காஹ் லியோங் தொடர்ந்து கூறுகையில், மற்ற மாநிலங்களில் இஸ்லாம் அல்லாதார் என்ற ஒரு பிரிவு அமைக்கப்படவில்லை. அது பேரா அரசில் மட்டுமே உள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார்.-Alaiolinews

Post Image

Leave a Comment
Trending News