Alaioli
சத்யா பிரான்சிஸ்
ஜார்ஜ் டவுன் பினாங்கு ஏப்ரல் 12.
பினாங்கு விளையாட்டு கிளப் ஏற்பாட்டில் நடைபெற்ற கால்பந்து குழுக்களுக்கான அனைத்துலக போட்டியில் 70 கால்பந்து குழுக்கள் பங்கு பெற்றன. விளையாட்டின் இறுதி போட்டியில் சிங்கப்பூர் ஜூரோங் வெஸ்டர்ன் குழு, எம். ஆர். எம். கால்பந்து குழுக்கள் விளையாடின. இந்த இறுதி சுற்றில் எம் ஆர் எம் குழு 3. 2. என்ற நிலையில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற முதல் குழுவுக்கு 3, 500 வெள்ளி ரொக்கமும் வெற்றி கேடயமும் வழங்கப்பட்டது. இரண்டாம் நிலையில் வந்து குழுவுக்கு கேடயமும் 2, 500. வெள்ளி வழங்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக பினாங்கு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டியில் பல நாடுகளில் இருந்து 70 குழுக்கள் பங்கு கொண்டன.
கால்பந்தாட்டக் குழுக்கள் இடையே உடல் மன வலிமையை உறுதிப்படுத்தவும், விளையாட்டு துறையை மேம்படுத்தவும், விளையாட்டாளர்கள் இடையே நட்புறவை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு கால்பந்து விளையாட்டு போட்டி கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருவதாக இப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் கூறினார்.
கிராண்ட் மாஸ்டர் இறுதிப் போட்டியில் ராயல் சிலாகூர் கிளப் வெற்றி பெற்றது. இரண்டாம் நிலையில். செமாராங் ஓல்டு ஸ்டார் வெற்றி பெற்றது. மாஸ்டர் இறுதி நிலையில் ரோசனேரி மலாயா வெற்றி பெற்றது. இரண்டாம் நிலையில் பினாங்கு விளையாட்டு கிளப் வெற்றி பெற்றது. வெட்ரன் இறுதி சுற்றில் மெல்வுட் பாய்ஸ் கிளப் வெற்றி பெற்றது.
முதல் நிலையில் வெற்றி பெற்று குழுவுக்கு கேடயமும் 3,500 வெள்ளி ரொக்கமும் வழங்கப்பட்டது. இரண்டாம் நிலையில் வந்த வெற்றியாளருக்கு கேடயமும் 2,500. வெள்ளி வழங்கப்பட்டது.
கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளைக் காண நூற்றுக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கூடி வந்தனர்.
கெடா
இசைக் காதலர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட “இதய கீதம்” இன்னிசை இரவு !
ஜார்ஜ்டவுன்
தொழில் அதிபர் டத்தோ அழகிரி சாமிக்கு பாராட்டு விழா
மலேசியா
வட செபராங் பிறை மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வருடாந்திர விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது!
பினாங்கு
பினாங்கில் “இசையின் சங்கமம் 2.0” – 43ஆவது ஆண்டு விழா இசை நிகழ்ச்சி!
பகாங்
பள்ளிகளில் திருக்குறள் தனிப்பாடமாக வேண்டும் - கணேசன் வலியுறுத்து!!
மலேசியா
பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மனிதநேய விழா
ஈப்போ
மாநில அரசு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை புறக்கணிப்பதா? ம இ காவின் முதிர்ச்சியற்ற போக்கு - சிவநேசன்!!
பட்டர்வொர்த்
முதியோர்கள் சமூகத்தின் தூண்கள் – பினாங்கு கோ. சாரங்கபாணி மன்றம் ஏற்பாடு செய்த விழா எடுத்துக்காட்டாக அமைந்தது