Alaioli
பேரா மாநில அரசாங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை பேரா மாநில ம இ காவினர் புறக்கணித்திருப்பது அர்த்தமற்றது.அவர்களின் அத்தகையப் போக்கு முதிர்ச்சியற்றது எனவும் கூறிய மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் அக்கட்சியின் அச்செயல் வருத்தம் அளிக்கும் ஒன்று எனவும் குறிப்பிட்டார்.
பேரா மாநில அரசாங்கத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு என்பது அரசியலுக்கு அப்பால்பட்டது.இதனை அக்கட்சி புறக்கணிப்பது அவர்களின் முதிர்ச்சியற்ற செயல்பாட்டை எடுத்துகாட்டுவத்தோடு அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில ஆட்சியாளரை மதிக்காத நிலையையும் அஃது உருவாக்கியுள்ளது என்றார்.
மேலும்,இது அரசியல் கட்சியின் நிகழ்ச்சி அல்ல.மாநில அரசாங்கத்தின் நிகழ்ச்சி.அந்த அரசின் கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் ம இ கா தங்களின் அதிர்ப்தியை வெளிப்படுத்தவோ,கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவோ இது தலம் இல்லையெனவும் அவர் சுட்டிக்காண்பித்தார்.
அதுமட்டுமின்றி, ஒரே கூட்டணியிலிருந்து கொண்டு இவ்வாறு செய்வது வியப்பாக உள்ளதாக கூறும் சிவநேசன் கூட்டணியில் அதிர்ப்தி இருக்குமானால்,கூட்டணி கட்சிகளோடு கலந்து பேச வேண்டும்.அதவிடுத்து அரசு நிகழ்ச்சியை புறக்கணிப்பது ஆட்சியாளரையும் அரசாங்கத்தையும் மதிக்காத ம இ காவின் செயலவை படம் பிடித்து காட்டுகிறது.இது அக்கட்சியின் அரசியல் புரிதலுக்கும் செயல்பாட்டுக்கும் பெரும் இழுக்கு என்றும் சிவநேசன் கூறினார்.
ஒருவேளை,நடப்பு கூட்டணியிலிருந்து அக்கட்சி விலகும் எண்ணம் கொண்டிருந்தால்,அதன் தேசிய பேராளர் மாநாடுக்கு பின்னரே இம்மாதிரியான புறக்கணிப்புகளை அவர்கள் செய்ய வேண்டும்.அதைவிடுத்து கூட்டணியில் இருந்து கொண்டே இவ்வாறு செய்வது அர்த்தமற்றது என்றார்.
மேலும்,இம்மாதிரியான புறக்கணிப்பை மேற்கொள்ளும் ம இ கா அக்கட்சியின் பேராளர் மாநாடுக்கு காத்திருக்காமல் மாநில நிலையில் வகிக்கும்.ஊராட்சி மன்ற உறுப்பினர்,கிராமத்து தலைவர் உட்பட மாநில அரசாங்கத்தின் பதவிகளை இராஜினாமா செய்ய முன் வருவார்களா எனவும் சிவநேசன் கேள்வி எழுப்பினார்.
கெடா
இசைக் காதலர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட “இதய கீதம்” இன்னிசை இரவு !
ஜார்ஜ்டவுன்
தொழில் அதிபர் டத்தோ அழகிரி சாமிக்கு பாராட்டு விழா
மலேசியா
வட செபராங் பிறை மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வருடாந்திர விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது!
பினாங்கு
பினாங்கில் “இசையின் சங்கமம் 2.0” – 43ஆவது ஆண்டு விழா இசை நிகழ்ச்சி!
பகாங்
பள்ளிகளில் திருக்குறள் தனிப்பாடமாக வேண்டும் - கணேசன் வலியுறுத்து!!
மலேசியா
பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மனிதநேய விழா
ஈப்போ
மாநில அரசு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை புறக்கணிப்பதா? ம இ காவின் முதிர்ச்சியற்ற போக்கு - சிவநேசன்!!
பட்டர்வொர்த்
முதியோர்கள் சமூகத்தின் தூண்கள் – பினாங்கு கோ. சாரங்கபாணி மன்றம் ஏற்பாடு செய்த விழா எடுத்துக்காட்டாக அமைந்தது