Alaioli
வட செபராங் பிறை மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வருடாந்திர விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது!

வட செபராங் பிறை மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆண்டு தோறும் நடைபெறும் வருடாந்திர விளையாட்டுப் போட்டி உற்சாகமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியை பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு  அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில் கலந்து கொண்ட அவர் தனது உரையில்,

மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டும் அல்லாது, விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்குவது பெருமைக்குரியது. மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்காக கல்வியுடன் விளையாட்டும் இணைந்து செயல்பட வேண்டும்,

என்று குறிப்பிட்டார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. தியாகராஜன்  தலைமையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள் பல்வேறு தடகள மற்றும் அணிக் கள விளையாட்டுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, உற்சாகத்துடன் பங்கேற்றனர். போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


மேலும், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மற்றும் உள்ளூர் சமூக பிரதிநிதிகளும் பெருமளவில் பங்கேற்று மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில், தலைமை ஆசிரியர் திரு. தியாகராஜன்  நன்றி தெரிவித்து,

இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள், அவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சமநிலை பெற்றால் சமூக முன்னேற்றம் உறுதி,

என்று வலியுறுத்தினார்.

இவ்வாறு மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வருடாந்திர விளையாட்டுப் போட்டி மகிழ்ச்சிகரமான சூழலில் நிறைவுற்றது. விளையாட்டுப் போட்டியின் இறுதியில் மலாக்கோப் தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு 4 ஏக்கர் நிலம் உறுதியாகிவிட்டது, கூடிய விரைவில் அதிகாரவப்புர்வ நிலம் ஒப்படைப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு  சோமு கூறினார்.

Leave a Comment
Trending News