Alaioli
கோலலங்காட் மாவட்ட வளர்ச்சியில் தமது பங்களிப்பு தொடரும்;  பாப்பா ராய்டு உறுதி.

எஸ்.எஸ்.மணிமாறன்.

பந்திங். மார்ச் 3.  கோலலங்காட் மாவட்ட ரீதியில் செயல்படும் அதன் வளர்ச்சித் திட்டங்கள் வெற்றியடைய தமது பங்களிப்பும் ஒத்துழைப்பும் ஆதரவும் தொடரும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் உறுதி அளித்தார். இன்று காலையில், கோலலங்காட் மாவட்ட இலாகா சிறப்புக் கூட்ட அறையில், மாவட்ட ஆட்சியர் புவான் தெங்கு ரோஹானா தெங்கு ரோஹானா தலைமையில்  கூட்டத் தொடர் 1/ 2026 அடிப்படையில் நடைபெற்ற கலந்தாய்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மேற்கண்ட கருத்தை,  பின்னர் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். 


மாவட்ட ரீதியில் உருவாக்கம் காணப்பட்டு வரும் மேம்பாட்டுத் திட்டங்கள் மக்கள் நலத் திட்டங்களை அதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் கூடுதல் சிரத்தை எடுத்து கவனம் செலுத்தி அரசின் திட்டங்கள் வெற்றியடையச் செய்வதில் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு ஆலோசனை விடுத்தார்.


மாவட்ட ஆட்சியர் புவான் தெங்கு ரோஹானா வேண்டுகோளின்படி, மாவட்ட ரீதியில் உருவாக்கம் காணப்படும் திட்டங்கள் தாமதம் அடையாமல், எந்த வித சேதாரமும் இன்றி முழுமை பெற மாநில அரசும் பக்கபலமாக இருந்து செயல்படும் என்று பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார். கோலலங்காட் மாவட்ட பிகேஆர் தொகுதி துணைத் தலைவர் ஹரிதாஸ் ராமசாமி, அரசியல் தலைவர்கள், மாவட்ட அலுவலக ப் பணியாளர்கள் இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Post Image

Leave a Comment
Trending News