Alaioli
பினாங்கில் சமூக ஒற்றுமையை பலப்படுத்தும் நோக்கத்தில்  மாநகர் மன்ற உறுப்பினர்களின் நோன்பு துறப்பு நிகழ்ச்சி!

பினாங்கு மார்ச் 4 பினாங்கு மாநிலத்தில் சமூக ஒற்றுமையை பலப்படுத்தும் உன்னத நோக்கத்துடன், இங்கிருக்கும் மாநகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், திரளானோர் கலந்து கொண்ட வேளையில், அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் பற்பல  இனிய வகை உணவுகளைப்  பரிமாறி மகிழ்வித்தனர்.


இங்கிருக்கும் அஜீஸ் இப்ராஹிம் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்குமாநில மாநகர் மன்ற மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் மற்றும் மலேசிய மீன்வள வாரியத் தலைவர் ஹஜி முகமட் ஃபயிஸ் ஹஜி ஃபட்சில் இருவரும் அழைக்கப்பட்ட  பிரதானப் பிரமுகர்களாக வருகையளித்திருந்தனர்.


மாநில மாநகர் மன்ற உறுப்பினர்களான முகமட் கைருள் முகமட் அலி மற்றும் முகமட்  கைரானி அப்துல் ஷுக்கோர் ஆகிய இருவரது முன்முயற்சியில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு ஏனைய மன்ற உறுப்பினர்களும் நல்லாதரவு வழங்கியிருந்த நிலையில்,  இங்கு எளிய நிலையிலுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்ட அரசு ஊழியர்களுக்கு நிதியுதவி  வழங்கும் அங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அவ்வண்ணம் ஏறத்தாழ 100 பேருக்க இந்நிகழ்ச்சியில் நோன்புப் பெருநாள் அன்பளிப்பாக  ஆறுதல் நிதியுதவி வழங்கப்பட்ட வேளையில் மேயர் டத்தோஅ.ராஜேந்திரன் வாயிலாகவும்,விழா ஏற்பாட்டாளர்களான மன்ற உறுப்பினர்கள் வழியாகவும் அவைசம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டன.


Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News