Alaioli
மலேசிய இந்து சங்கம் குளுகோர் வட்டாரப் பேரவை அனைத்து வட்டார கோவில்களுக்கும் சந்திப்புக் கூட்டம்

குளுகோர் மார்ச்சு 3-கடந்த சனிக்கிழமை 28 பிப்ரவரி 2026  மலேசிய இந்து சங்கம் குளுகோர் வட்டாரப் பேரவை அனைத்து வட்டார கோவில்களுக்கும் சந்திப்புக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது.மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலம்,உள்ளூர் வட்டார கோவில் மற்றும் மலேசிய இந்து சங்கம் குளுகோர் வட்டார கோவில் பிரிவு இணைந்து கோவில் நிர்வாக பிரதிநிதிகளுக்கான இச்சந்திப்புக் கூட்டத்தை பூமரத்தம்மன் கோவிலில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மிகவும் வெற்றிகரமாக நடத்தினர்.


இந்தக் கூட்டத்தில் மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில தலைவர் விவேக ரத்னா அ.தர்மன் PKT, PJK, PJM, – மலேசிய இந்து சங்கம் மாநில துணைத் தலைவர், விவேக ரத்னா ச.சத்தியசீலன் PJM,  – மலேசிய இந்து சங்கம் குளுகோர் வட்டாரப் பேரவை தலைவி விவேக ரத்னா க.கலாராணி PJK-மற்றும் மலேசிய இந்து சங்கம் குளுகோர் வட்டாரப் பேரவை கோவில் பிரிவு தலைவர் திரு. கணேசன்,  ஆகியோர் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பாக வழிநடத்தினர்.


மொத்தம் 18 கோவில்களின் நிர்வாக பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், கோவில்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், தொடர்ந்து மேற்கொள்ளவிருக்கும் கோவில் நிகழ்ச்சிகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து ஆலோசித்தல், நிர்வாகம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை விவாதித்தல், மற்றும் பக்தர்களின் நலனுக்காக கோவில் நிகழ்ச்சிகளை சீராக செயல்படுத்துவது போன்ற அம்சங்கள் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டன.


இந்த முயற்சிகள் மூலம், கோவில்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் திறமையான நிர்வாகம் மேலும் வலுப்பெறும் என அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தொகுத்து வழங்கியவர்:

நளனி சசிகுமார்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News