Alaioli
சுங்கை பக்காப் அருள் மிகு கற்பக விநாயகர் ஆலய கும்பாபிஷேகதில் கலந்துகொள்ள ஆலய நிர்வாகம் அழைப்பு


சுங்கை பக்காப்  மார்ச்சு 4 பினாங்கு, சுங்ஙை  பாக்காப்பில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம், கடந்த கோவிட் 19க்கு முன்பே புதுபிக்கப்படவேண்டிய  சூழல் ஏற்பட்டு புத்தாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு ஆலய மூலஸ்த்தான சுவாமி பீட ஸ்தாபனமும் முற்றுப்பெற்று  ஆலய கும்ப அபிஷேகம் காணவேண்டிய நிலையில் உள்ளது என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதன் ஆலய தலைவர் டத்தோ மா.பெருமாள் தெரிவித்தார்.



மெய்யன்பர்களே, நல்லுள்ளங்களே, நன்கொடையாளர்களே தங்களின் கனிவான நன்கொடைகளை வேண்டி இங்கே அன்புடன் எதிர்பார்க்கிறோம் என மேலும் தெரிவித்த அவர் . கும்பாபிஷேகத்திற்கு ஏறக்குறைய  ஒரு இலட்சம் மலேசிய ரிங்கிட்  தேவைப்படுகிறது. ஆதலால் அருமை நன்கொடையாளர்களின் நல்லாதரவை எதிர்ப்பார்கின்றோம் என விவரித்தார்.



பொது மக்களின்  கவனத்திற்கு, ஆலய மஹா கும்பாபிஷேகம் வருகின்ற  08.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 8.00 முதல் 11.00க்குள் நடைபெறவுள்ளது. பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல்  ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ ஶ்ரீ சுந்தர்ராஜூ சோமு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். அனைவரையும் இந்த திருக்குட நன்னீராட்டு பெருசாந்தி பெருவிழாவில் கலந்து கொண்டு திருவருள் பெற்றுய்ய அன்புடன் அழைக்கிறோம். என ஆலய தலைவர் டத்தோ மா. பெருமாள் மற்றும் ஆலய நிர்வாக குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

 

பொது மக்கள்,நன்கொடையாளர்கள் தங்களின் கனிவான நன்கொடைகளை  HONG  LEONG  BANK  A/N. 30700022883 ( GANESH TEMPLE  SUNGAI  BAKAP) வங்கிக் கணக்கில்  செலுத்தியவுடன் அதன் ஆதார  வங்கியின் பற்றுச் சீட்டினை 012 517 1417 புலனத்தில்( WhatsApp) பதிவேற்றம் செய்யவும். வழங்கப்படும் நன்கொடைகளுக்கு ஆலயப் பற்றுச் சீட்டு வழங்கப்படும். என்று  தலைவர், ஸ்ரீ  காசி சங்கபூஷண் டத்தோ பெருமாள் மாரப்பன் தெரிவித்தார் 

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News