Alaioli
அடுத்த ஆண்டில் முதலாம் வகுப்பில் கல்வி பயில ஆறு வயது மாணவர்கள் 351,789 பேர் பதிவு; துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ அறிவிப்பு.

எஸ்.எஸ்.மணிமாறன்.

கோலாலம்பூர். மார்ச் 3.  அடுத்த ஆண்டில் முதலாம் வகுப்பில் கல்வி பயில்வதற்காகப் பதிவு செய்துள்ள ஆறு வயது மாணவர்கள் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி,  361,789 பேர் பதிவு செய்துள்ளனர் என்று கல்வி துணையமைச்சர் வோங் கா வோ நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.


இந்த எண்ணிக்கை இவ்வருட இறுதிக்குள் மேலும் பன்மடங்காக உயரும் என்று அவர் கூறினார். இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கல்வி துணையமைச்சர் வோங் கா வோ இது குறித்து விளக்கம் அளித்தார்.


வரும் 2027 இல், ஆறு வயது மாணவர்கள் முதலாம் வகுப்பில் கல்வி பயில வரும் நாளில் ஆரம்பப் பள்ளிகளில் அதற்கான வசதிகளையும் கூடுதல் வகுப்பறைகள் இருப்பதையும் கல்வி அமைச்சு உறுதி செய்யும் என்று அவர் கூறினார். முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்ப அதற்கு தகுதியான ஆசிரியர்களும் பணியில் அமர்த்தப்படுவர் என்றும் வோங் கா வோ தெரிவித்தார்.

Leave a Comment
Trending News