Alaioli
பிரதமர் மசோதா மீண்டும் தாக்கல் ; சமுதாயம் வரவேற்கிறது

டிகே.மூர்த்தி,

தெலுக் இந்தான், மார்ச் 4-கடந்த வாரம் (02.03.2026) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மக்களைவையில் அரசாங்க சார்பில் கொண்டு வந்திருந்த பிரதமர் என்பவர் (10 ஆண்டுகள்) இரு தவணைக் கால அடிப்படையில் மட்டுமே பதவியில் சேவை செய்ய வேண்டி அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதவைக் கொண்டு வந்திருந்தார். அந்த மசோதா நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப் பெற்றதால் தான் அந்த புதிய அரசியலைமைப்பு சட்டத் திருத்த மசோதா ஜனநாயக முறையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்படும். 


நடந்து என்னவென்றால், வருகை அளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் அரசுக்கு ஆதரவாக 146 வாக்குகள் கிடைக்கப்பெற்றது. இது பெரும்பான்மைக்கு 2 வாக்குகள் பற்றாக்குறையால் அரசாங்கம் கொண்டுவந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும், அடுத்த மக்களவை கூட்டத் தொடரில் பிரதமர் அந்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்வார் என்றும் தகவல் பல்லூடக அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கலந்துக் கொள்ளாத அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்க்கமற்ற காரணத்தைக் கூறியுள்ளனர் என்றும் வெளிப்படுத்தியது.


அந்த வகையில் ஜசெக (DAP) மற்றும் பிகேஆர் (PKR) சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக 100 சதவீதம் ( PANDAN MP RAFIZI RAMLI) உட்பட பங்கேற்று (146) பேர் வாக்களித்துள்ளனர். இதில் தேசிய முன்னணி சேர்ந்தவர்கள் கேட்டது (பதவி) கிடைத்தால் அரசுடன் தொடருவோம் என்ற நினைப்பில் இருந்தால் அதனை மாற்றிக்கொண்டு நாட்டுக்காக நாட்டு நலுனுக்காக பிரதமர் சமர்ப்பித்த அரசாங்க மசோதவுக்கு வாக்களிப்பில் கலந்து கொண்டிருந்தால் தாப்பா தொகுதி மக்களுக்கும் ஒரு மரியாதையாக இருந்திருக்கும். 


போனால் போகட்டும் என்ற மன நிலையை மாற்றிக் கொள்ளவேண்டும். (B.N.) அரசாங்கத்தின் மூலம் துணையமைச்சர் மற்றும் முழுயமைச்சர் பதவி வகித்தவர். இவர் போட்டியிடும் வேட்பாளராக இருந்து வேட்பாளர் அங்கீகார தினத்தில், கோயில் திருவிழாவுக்கு போவாரா? அல்லது வேட்பாளர் பதிவு அலுவலகத்திற்குச் செல்வாரா? என்றால் நிட்சயமாக அலுவலகத்திற்கு தான் செல்வார். இந்த நிலையில் மஇகாவுக்கும் பிரதமருக்கும் நல்ல உறவு இருப்பது கடந்த மாதம் பிரதமர் பத்து மலைக்கு வருகையளித்தபோது நாடே பார்த்தது. இல்லை என்று மறுக்க முடியுமா? 


பிரதமர் தம் தலைமையில் எடுக்கும் முடிவுகள் என்பது எப்போதுமே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நோக்கியே பார்க்கப்படுகிறது. அந்த முடிவை ஒரு குடிமகனாக ஒழுக்கத்திலும் நம்பிக்கையிலும் நிரூபித்து வருகிறார். அதனை ஏற்றுக் கொள்வது அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினரின் கடமை. ஏனெனில் இது ஒற்றுமை அரசு. இந்த அரசாங்கத்தில் ஒற்றுமைதான் வாழ வைக்கும். அந்நிலையில் நாடாளுமன்றத்தில்  ஆளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகப்பெரிய சக்தி என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment
Trending News