Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங், ஏப்ரல் 16- நாட்டில் மிகப் பெரிய அளவில் ஆங்காங்கே கொண்டாடப்படும் ஹரிராயா நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் மற்ற இனத்தவரும் பங்கு பெறுவதன் மூலம் மத நல்லிணக்கத்தை வளர்த்து கொள்ளவும் சகோதரத்துவம் ஒருமைப்பாட்டை பேணிக் காக்கவும் சிறந்த தலமாக விழாக் கால உபசரிப்புகள் மனதுக்கு நிறைவாக அமைந்துள்ளது என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தமது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

பந்திங் கிராமத் தலைவர் தோக் முகமட் ஹிஷான் முகமட் அரிப் மற்றும் அவர்தம் ஏற்பாட்டுக் குழுவினரும் இங்கு தாமான் செரி புத்ரா மக்கள் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள சமூக மண்டபத்தில் நடத்திய ஹரிராயா நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த அவர் நிகழ்ச்சியில் பேசியபோது தமது வாழ்த்துரையில் மேற்கண்ட கருத்தை வலியுறுத்தினார்.
மோரிப் சட்ட மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் துவான் ஹாஜி ஹஸ்னுல் பகாருடின் அவரை முகமலர்ச்சியுடன் வரவேற்றார்.

உபசரிப்பின் ஊடே, பி 40 பிரிவின் கீழ் உள்ள வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாப்பா ராய்டு உணவுப் பொருட்களை எடுத்து வழங்கினார்.
பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் உயர் அதிகாரி கண்மணி பெரியண்ணன், பந்திங் இந்தியர் சமூகத் தலைவர் சாமிதுரை, தாமான் செரி புத்ரா குடியிருப்பாளர்கள் அழைக்கப் பட்ட பிரமுகர்கள் என அறுநூறுக்கும் மேற்பட்டோர் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டனர்.-Alaiolinews


ஜொகூர்
கல்வியில் சிறந்த இலக்கை எட்டிப்பிடிக்க இந்திய மாணவர்களுக்கு இலவச தன்முனைப்புக் கல்விக் கருத்தரங்கு 2026.
ஷா ஆலம்
மாநில அரசின் பந்துவான் புளூபிரிண்ட் திட்ட நடவடிக்கையின் செயல்பாடுகள் குறித்து பாப்பா ராய்டு விளக்கம்.
ஷா ஆலம்
சிலாங்கூர் மாநில இல்திஷாம் புரோகிராம் பந்துவான் திட்டத்தில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு உதவிகள் முன்னெடுக்கப்படும்= பாப்பா ராய்டு அறிவிப்பு.
ஆசியான்
Isteri polis, prebet askar ditangkap dalam bilik sewa
சிலாங்கூர்
Tiga termasuk Timbalan Pengerusi NGO ditahan SPRM kes seleweng dana zakat RM230 juta
சிலாங்கூர்
Ops Serkap bongkar sindiket manipulasi sistem imigresen beroperasi hampir dua tahun
சிலாங்கூர்
Konflik Asia Barat: PM memperkenalkan Kemudahan Khas RM5 bilion untuk Perusahaan PMKS
போதைப்பொருள்
Dadah jenis Furanyl dan Fentanyl mula tembusi pasaran melalui kedai Vape