Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்.
பத்து பகாட் ஏப்ரல் 22. கல்வியில் சிறந்த அடைவு நிலையை எட்டிப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய மாணவர்களுக்கான இலவச தன்முனைப்புக் கல்விக் கருத்தரங்கு 2026 வரும் 1.5.2026 மே தினத்தன்று காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 3.30 மணி வரை, பத்து பகாட் செரி பெலாங்கி தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் நடைபெற விருப்பதாக இதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ரமேஷ் பி என்பவர் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
படிவம் 4 மற்றும் படிவம் 5 இல் தற்போது கல்வி கற்று வரும் இந்திய மாணவர்கள் வரும் 28.4.2026 க்குள் கல்விக் கருத்தரங்கில் கலந்து கொள்ள முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார். பத்து பகாட் லாடாங் ஸ்ரீ காடிங் தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
நூற்றுக்கணக்கான மாணவர்களை கல்வித் தடத்தில் பயணிக்க வைத்து சிறந்த வழிகாட்டியாக அமைத்து அவர்கள் எதிர் காலத்திற்கு ஒளி ஏற்றி வைத்த குளுவாங் கல்வி மையத்தின் கல்வித் திலகம், கல்வி அரசர் முனைவர் டத்தோ டாக்டர் இளந்தேவன் அண்ணாமலை , கல்விக் கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தருவதோடு கல்விக் கருத்தரங்கைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்குவார் என்று ரமேஷ் அலை ஒளியிடம் குறிப்பிட்டார். மேலதிக விபரங்களுக்கு...ரமேஷ் பி...012 7141307
ஜொகூர்
கல்வியில் சிறந்த இலக்கை எட்டிப்பிடிக்க இந்திய மாணவர்களுக்கு இலவச தன்முனைப்புக் கல்விக் கருத்தரங்கு 2026.
ஷா ஆலம்
மாநில அரசின் பந்துவான் புளூபிரிண்ட் திட்ட நடவடிக்கையின் செயல்பாடுகள் குறித்து பாப்பா ராய்டு விளக்கம்.
ஷா ஆலம்
சிலாங்கூர் மாநில இல்திஷாம் புரோகிராம் பந்துவான் திட்டத்தில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு உதவிகள் முன்னெடுக்கப்படும்= பாப்பா ராய்டு அறிவிப்பு.
ஆசியான்
Isteri polis, prebet askar ditangkap dalam bilik sewa
சிலாங்கூர்
Tiga termasuk Timbalan Pengerusi NGO ditahan SPRM kes seleweng dana zakat RM230 juta
சிலாங்கூர்
Ops Serkap bongkar sindiket manipulasi sistem imigresen beroperasi hampir dua tahun
சிலாங்கூர்
Konflik Asia Barat: PM memperkenalkan Kemudahan Khas RM5 bilion untuk Perusahaan PMKS
போதைப்பொருள்
Dadah jenis Furanyl dan Fentanyl mula tembusi pasaran melalui kedai Vape