Alaioli
பெக்கான் பாரு சம்பவத் தொடர்பில் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் சேவை குறை சொல்லாதீர்; டத்தோ சிவநேசன் ஆய்வு..!

டிகே.மூர்த்தி

ஈப்போ, ஏப்ரல் 26- பெக்கான் பாரு குடியிருப்பில் கடந்த 17.04.2026 ல் காலை 6.17 மணிக்கு நடந்தக் கொள்ளைச் சம்பவத்தில், 69 வயதுடைய முதியவரை சந்தேக நபர்கள் அரிவாள் கொண்டு தாக்கியதில், அந்த முதியவர் பரிதாமாக மரணித்துள்ளார்.

இது குறித்த பாதிக்கப்பட்டவரின் துணைவியார் 24 மணி நேரமும் சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் 999 (HOSPITAL) மாவட்ட அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தும், தக்க தருணத்தில் வந்து சேராததால் தனது கணவர் உயிரிழந்தார் என்ற குற்றசாட்டை தெலுக் இந்தான் அரசு மருத்துவமனை மீது வைத்துள்ளார். 



இது குறித்த விடயத்தை மாநில சுகாதார இலாகாவிடம் அணுகியதாகவும், அவர்களும் நடந்த சம்பவம் குறித்த அறிக்கையை தம்மிடம் வழங்கியுள்ளனர் என்றும் மாநில சுகாதார இலாகாவின் தலைமையாளரும், ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் “அலைவொளி” ஊடகத்திடம் கூறினார். 



சுகாதார இலாகா வாழங்கியுள்ள சம்பவம் குறித்த தகவலின்படி, ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு காலை 6.23  மணிக்கு 999 (HOSPITAL) தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் பெற்ற 4 நிமிடங்களில் சேவை மையத்திலிருந்து மருத்துவமனை ஆம்புலன்ஸ் வண்டி குறிப்பிட்ட இலக்கை நோக்கி அதீத வேகத்தில் பயணித்த நிலையில், காலை 6.40 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள கூடிய நியாயமான நேரம் என தெரிவித்தார். 


எனினும், மாநில சுகாதார அமைச்சு காலம் சென்ற அந்த முதியவரின் குடும்பத்தினருக்கு தனது ஆழந்த துயரத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸ் வண்டி தாமதம் என்று கூறும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இதுவரை புகார் அளிக்கக் கிடையாது.


அவர்களுக்கு ஆம்புலன்ஸ் குறித்த திருப்திகரமாக இல்லையெனில், சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களின் உரிமைக்கு உட்பட்டுள்ளது.  இதை நானும் மறுக்கவில்லை. அதே வேளையில், மாநில அரசு அக்குடும்பத்திற்கு எது போன்ற உதவிகளை முன்னெடுக்கலாம் எனவும் சீர்தூக்கிப் பார்த்து வருகிறது. 


அரசு ஆய்வின் மூலம் ஆம்புலன்ஸ் வண்டி குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்தடைந்துள்ளது என்பதே உண்மை. அந்நிலையில் மாவட்ட மருத்துவமனை மீது எதிர்மறையானக் குற்றச்சாட்டை முன்வைப்பது அரசாங்கம் ஏற்றுக் கொள்ள அனுமதிக்காது என்றும் சுங்காய் ஜசெக சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ சிவநேசன் நடந்ததை விவரித்தார். - Alaiolinews

Post ImagePost Image

Leave a Comment