Alaioli
47 வருடங்களுக்குப் பின்னர் பெஸ்தாரி ஜெயா தமிழ்ப் பள்ளியில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் 44 பேர் பங்கேற்ற நட்பின் சங்கமம்

எஸ்.எஸ்.மணிமாறன்

பெஸ்தாரி ஜெயா, ஏப்ரல் 26 - சிறந்த கல்வியாளர்கள், தொழில் சார்ந்த  துறைகளில் ஈடுபடுவோர், சொந்த வியாபாரத்தில் ஆர்வம் காட்டி வருவோர், என வாழ்க்கையில் பல் வேறு நிலைகளில் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் பெஸ்தாரி ஜெயா பத்தாங் பெர் சுந்தை தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் 44 பேர்.



நீண்ட இடைவெளிக்குப் பிறகு 47 வருடங்கள் கடந்து, இன்று காலையில் அதே பள்ளி மண்டபத்தில் இன்று காலையில் நடைபெற்ற நட்பின் சங்கமம் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட தருணத்தில் என்ன பேசுவது என்ற குழ்நிலையில் ஒரு கணம் பரவச நிலையில் ஆற அமர அமர்ந்து கலந்து பேசி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது கடந்து போன அனுபவங்களை ஒலிப் பெருக்கி வாயிலாகப் பேசி மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர். 




முன்னதாக, குழு ப்படம் எடுத்து கொண்ட பழைய மாணவர்கள் நட்பின் சங்கமம் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை வழி நடத்திய இதே பள்ளியில் கல்வி கற்ற சமூகச் சேவையாளர் திருமதி ஜெகதீஸ்வரி வேலு,  தலைமையில் பழைய மாணவர்கள் ஒன்றுகூடல் நினைவாக அணிச்சல் வெட்டி தங்களது அன்பை வெளி கொணர்ந்தனர்.



பழைய மாணவர்களில் பலரும் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்த நேரத்தில் அந்த வசந்தத் தென்றல் தீட்டியதன் காரணமாக பிள்ளைகளைப் பெற்று குடும்பத்தோடு நிறைவாக வாழ்க்கையில் பயணித்து வரும் வேளையில் பிள்ளைகளுக்கும் திருமணம் நடந்து அதன் வாயிலாக தாத்தா பாட்டி என்ற அடையாளத்துடன் பேரப் பிள்ளைகளையும் தற்போது தூக்கி கொஞ்சி மகிழும் அனுபவங்களையும்  தாங்கள் பெற்றதாக நட்பின் சங்கமம் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பழைய மாணவர்கள் சிலர் மனம் திறந்து அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தனர்.



பெஸ்தாரி ஜெயா தமிழ்ப் பள்ளி கல்விப் பயணத்தின் போது, பழைய மாணவர்கள், ஆசிரியர்களிடம் தாங்கள் பெற்ற அனுபவங்களையும் அலை ஒளியிடம் கூறினர். நட்பின் சங்கமம் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பழைய மாணவர்கள் அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திருமதி ஜெகதீஸ்வரி, நினைவுப் பரிசுகள் எடுத்து வழங்கி அவர்களை வாழ்த்தினார்.


அதே வேளையில், தொலை தூரத்தில் இருந்து செய்தி சேகரிக்க வந்திருந்த கோல சிலாங்கூர் மண்ணின் மைந்தர், அலை ஒளி ஊடகச் செய்தியாளர் கவிமாமணி எஸ்.எஸ்.மணிமாறனின் சேவையை மதிக்கும் பொருட்டு அவருக்கு நினைவுப் பரிசு எடுத்து வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


காலையில் சிற்றுண்டி , பிற்பகலில் மதிய உணவு, மாலைத் தேநீர் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஜெகதீஸ்வரி அனைவருக்கும் உணவு உபசரிப்பை மனங் குளிர நடத்தினார்.  இதே போன்றதொரு நிகழ்ச்சியில் அடுத்து அனைத்து பழைய மாணவர்களும் மீண்டும் சந்திப்போம் என்ற உறுதி மொழியுடன் அனைவரும் விடை பெற்றனர்.- Alaiolinews

Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment