Alaioli
133 ஆண்டுகால  தம்புன் தேவ ஸ்ரீ முனிஸ்வரர் ஆலய நிலப் பிரச்சனைக்கு சிவநேசன் முயற்சியால் தீர்வு பிறந்தது!

தம்புன் ஆறாவது மைலில் எழுந்தருளியுள்ள அருள் மிகு தேவஸ்ரீ முனிஸ்வரர் ஆலய நிலப் பிரச்சனைக்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசனின் பெரும் முயற்சியால் தீர்வு பிறந்துள்ளது.

இங்கு இந்த ஆலயம் 133 ஆண்டுகள் அரசாங்க நிலத்தில் இருந்து வருகிறது. 

இந்த ஆலயம் தம்புன் ஆறாவது மைலில் உள்ள பிரதான சாலையில் அமைந்துள்ளது.

தம்புன் வட்டாரத்தில்  பிரசித்துப் பெற்ற இந்த ஆலயமாக இருந்து வரும் இந்த ஆலயத்திற்கு நாள் தோறும் சுமார் 100 பக்தர்கள் வந்து செல்கின்றனர்

இந்த ஆலயம் உள்ள ஆலய பகுதியில் மேம்பாடு திட்டங்கள் மேற்கொண்டு வருவதால் அந்த ஆலயத்தை அகற்ற நடவடிக்கை நில அலுவலகம் மேற்கொண்டது. 

இந்த விவகாரம் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் இந்திய விவகாரங்களுக்கு தலைவருமான சிவநேசனின் கவனத்திற்கு அண்மையில்  கொண்டுச் செல்லப்பட்டது.

ஆலயத்திற்கு வருகை புரிந்த அவர் அந்த ஆலயம் அருகில் உள்ள மகா மாரியம்மன் ஆலயம் அருகில்  உள்ள புதிய நிலத்தில் நிர்ரமாணிக்க அடையாளம் காணப்பட்டது.

அந்த நிலத்தில் நிலத்தை இடமாற்றம் செய்ய சிவநேசன் மேற்கொண்ட உந்துதலில் புதிய இடம் உறுதி செய்யப்பட்டதாக ஆலயச் செயலாளர் கதிரவன் நாகப்பன் தெரிவித்தார்.

அந்த புதிய இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய ஆலய நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

அந்த இடத்திற்கு ஆலயத்தை இடம் மாற்றம் செய்ய சுமார் 2 லட்சம் ரிங்கிட் தேவைப்படுகிறது. 

தற்பொழுது ஆலய நிர்வாகத்திடம் 50 ஆயிரம் ரிங்கிட் உள்ளது. எஞ்சிய நிதி  கோரிக்கையை சிவநேசனின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என்று கதிரவன் தெரிவித்தார்.

இந்த ஆலய இட மாற்றம் அடுத்தாண்டு ஐனவரி 15 ஆம் தேதிக்குள் செய்யவேண்டும் என்று நில அலுவலகம் அறிக்கை அனுப்பியுள்ளது்

குறிப்பிட்ட நாட்களுக்குள் இடத்தை காலி செய்ய உரிய நடவடிக்கையை  ஆலய நிர்வாகம்  எடுத்து வருகிறது.   அதற்கு  நிதி உதவியை சிவநேசன் முன்னெடுப்பார் என்று எதிர்ப்பதாகவும்  , முன்னதாக அவரிடம் நிதி கோரிக்கை முன் வைக்கப்படும் என்று ஆலயத் தலைவர் சத்திய ராஜ் தெரிவித்தார்.


Leave a Comment
Trending News