Alaioli
பாகான் செராய் ஜின் செங் தோட்ட மாரியம்மன் ஆலயத்தில் நன்னீராட்டுப் பெருவிழா.

பாகான் செராய் நகரிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள 122 ஆண்டுகள் பழமையான ஜின் செங் தோட்ட அருள்மிகு மஹா முத்து மாரியம்மன் ஆலயத்தில், நன்னீராட்டுப் பெருவிழா  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


காலை 9:40 மணிக்கு தொடங்கி 10:40 மணி வரை நடைபெற்ற இந்த ஆன்மிக விழா, தோட்டத்தைச் சேர்ந்த மக்கள், முன்னாள் குடியிருப்பாளர்கள், பக்தர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பங்கேற்புடன் பிரமாண்டமாக நன்னீராட்டுப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டது. 


சிறப்பு விருந்தினராக, பினாங்கு பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குமரேசன் ஆறுமுகம் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

விழாவினை வெற்றிகரமாக நடத்த ஆலய நிர்வாகிகள் மிகச் சிறப்பாக திருப் பணியாற்றினர்.


ஆலயப்  நிர்வாக இயக்குநர்களான 

தலைவர்: திரு. தங்கராஜு அய்யாவு

துணைத் தலைவர்: திரு. கிருஷ்ணய்யா பைடூதலி

செயலாளர்: திரு. முருகேசன் வீரய்யா

பொருளாளர்: திரு. நந்தா மதியழகன்

மேலும், நன்னீராட்டுப் பெருவிழா ஒருங்கிணைப்பளரான 

திரு. குமரேசன் சங்கரபாணி

திரு. சிவாகரன் கிருஷ்ணன்

எழுச்சியுடன்  பணியாற்றினர்.


பக்தர்கள் கலந்துகொண்டு ஆராதனை நிகழ்வுகளில் கலந்து கொண்டு நேர்த்திக்கடன்கள் செலுத்தியதுடன், ஆலய வளாகம் முழுவதும் பக்தி சார்ந்த ஆனந்தமய சூழ்நிலை நிலவியது.

Leave a Comment
Trending News