Alaioli
கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஶ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் (திருக்குட நன்னீராட்டு பெருவிழா) மிக விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 13 ஜூலை 2025(ஞாயிற்றுக்கிழமை) கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. சிலாங்கூர் மாநிலத்தில் இயற்கையழகும், எழிழ்வளமும், நிறைந்த கோலாசிலாங்கூர் மாவட்டத்தின் இந்த கமாசான் தோட்டம் அமைந்துள்ளது.

150 ஆண்டுக் கால வரலாற்றைக் கொண்ட இத் தோட்டத்தில் ஸ்ரீ மஹா துர்கையம்மன் ஆலயம் அமைந்துள்ளது.


இவ்வாலயத்தின் திருப்பணிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது. ஆலயத் தலைவர் குருசாமி நாகு தலைமையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சிவஞான பாஸ்கர் சிவாச்சாரியார் தலைமையில் யாக சாலையில் காலை 10 மணியளவில் உதவி குருக்களுடன் யாக சாலையில் இருந்து கொணரப்பட்ட கும்பக் கலசங்களுடன் அனைவரும் உள்வீதி வலம் வந்து கோபுரக் கலசத்தில் சிறப்புப் பூஜைகள் நடத்தப் பட்டு புனித நீர் சரியாக காலை 10.50க்கு ஆலய கலசங்களுக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டது. அதே வேளையில் ஆலய வளாகத்தில் திரண்டிருத்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. 


அதன் பின் நடந்த பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வட்டார இந்து ஆலயங்களில் இருந்து சீர்வரிசைகளைக் கொண்டு வந்திருந்த ஆலயத் தலைவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. 


மஹிமா தலைவரும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான அறங்காவலருமான டத்தோ சிவகுமார் டான்ஸ்ரீ நடராஜா இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார். ஆலயத் துணைத் தலைவர் கணேசன் ஆண்டியப்பன், செயலாளர் வேல் முருகன், பொருளாளர் சதிஸ் சங்கரலிங்கம் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Leave a Comment
Trending News