Alaioli
வட செபராங் பிறை லோட் 1190, பிரிவு  நான்கில் அவசர பாதை அணுகல் சிக்கல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்: குமரன் கிருஷ்ணன்

செபராங் பிறை ஜூலை 30-

வட செபராங் பிறை பகுதியில்    அமைந்துள்ள லாட் 1190-இல் அவசர கால அணுகல் பாதை மூடல் மற்றும் கட்டிட கட்டமைப்புகள் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு புகார்களை அடுத்து, சம்பந்தப்பட்ட துறைகளின் பிரதிநிதிகள் இணைந்து நேரில் பார்வையிட்டதுடன் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் உடன் கலந்துக்கொண்டார்.



இந்த தள பார்வையில், செபராங் பிறை மாநகர் கழக உறுப்பினர்  திரு. லிங்கேஸ்வரன் சார்மர், வட செபராங் பிறை  மாவட்ட மற்றும் நில அலுவகம், செபராங் பிறை மாநகர் மன்ற மதிப்பீட்டுத் துறை, அமலாக்க இயக்குநரகம், உரிமத் துறை, கட்டிடத் துறை, மற்றும் நகராட்சி சேவைகள் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


பெரும்பாலான கட்டிட உரிமையாளர்கள், அந்த பகுதியிலுள்ள அவசர பாதை மூடப்படுவதால் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படுவதாகவும், அணுகலில் தடை ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்திருந்தனர். தேடல் நடவடிக்கையில், பாதை ஒரு பின் வழியாக இருப்பதோடு, அதற்கான நிலம் தனியாருக்குச் சொந்தமானது என்றும் கண்டறியப்பட்டது.


இந்த வருகையின் முக்கிய நோக்கங்கள்:நிலத்தின் உரிமை மற்றும் நிலைமை குறித்து மாவட்ட மற்றும் நில அலுவகத்திடம் இருந்து உறுதி செய்யல்,மூடப்பட்ட பாதை மற்றும் கட்டமைப்புகளுக்கு செபராங் பிறை மாநகர் மன்றம்  கட்டிடத் துறையிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளதா என ஆய்வு செய்தல்,பொதுமக்கள் பாதுகாப்பும், சட்டபூர்வமான கட்டுமான அனுமதிகளும் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை மதிப்பீடு செய்தல்.


இது போன்ற பிரச்சினைகள் பொதுமக்களின் நலனை பாதிக்கக்கூடியவையாக இருப்பதால், அனைத்து சம்பந்தப்பட்ட துறைகளும் இணைந்து விரைவில் ஒரு தீர்வை வகுக்கும் முயற்சியில் ஈடுப்படுமென பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.


\"உள்ளூர் சமூகத்தின் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்,\" என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment
Trending News