Alaioli
மதங்களைக் கடந்து மலேசியர்களாய் மேன்மை கொள்வோம் – நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார்

பல்லினம் வாழும் மலேசியாவில் நாம் மதங்களைக் கடந்து மலேசியர்களாய் மேன்மை கொள்ள வேண்டும் எனவும் பல்லினத்தின் ஒற்றுமையும் புரிந்துணர்வும் மதம்,இனம்,மொழி கடந்து மலேசியர்கள் என்னும் மேன்மையில் உயர்ந்திருப்பதாகவும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் குறிப்பிட்டார்.


அதுபோல்,நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து மக்களுக்கானப் பணியில் மதம்,மொழி,கடந்து ஆக்கப்பூர்வமாக தம் பங்களிப்பை ஆற்றி வருவதாக  கம்போங் கூர்னியா சூராவிற்கு வருகை புரிந்த பின்னர் சிவகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


சூராய் நிர்வாகம் முன் வைத்த கோரிக்கையை ஏற்று அங்கு வருகை புரிந்த சிவகுமார் அதன் தேவைகளைக் கேட்டறிந்தார்.அவ்வகையில்,இதற்கு முன்னர் பல தேவைகளை நிறைவு செய்திருக்கும் அவர் இம்முறை சூராய் நிர்வாகம் முன் வைத்த தரை விரிப்பு கோரிக்கையை ஏற்று கொண்டு கவனத்தில் கொள்வதாகவும் கூறினார்.


தொழுகைக்கு தரை விரிப்பு மிக முக்கியமான அம்சமாக அமைந்திருப்பதாகவும் விவரித்த சிவகுமார் இவ்விவகாரத்தை விரைந்து நல்லதொரு தீர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


சிவகுமாரின் இவ்வருகையின் போது அவரோடு கிராமத்து மேம்பாட்டு நிர்வாகம்,வட்டார கவுன்சிலர்கள் உட்பட அவரது சிறப்பு அதிகாரிகளும் உடன் இருந்தனர்.தங்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய சிவகுமாருக்கு சூராய் நிர்வாகம் நன்றியும் தெரிவித்தனர்.

Leave a Comment
Trending News